நியாயத்தீர்ப்பினால் மீட்பு Jeffersonville, IN USA 54-1114 1நன்றி, சகோதரன் நெவில். அந்த சுருக்கமான அறிவிப்பை நான் பாராட்டுகிறேன். மிகவும் அருமையானது. மறுபடியும் ஆராதனையை துவங்க இன்று காலை இங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் சிறிது நாட்களாக ஓய்வில் இருந்தேன். மேலும், இதுதான் அநேக நாட்களுக்கு பிறகு நான் எடுத்துக் கொண்ட நீண்ட ஓய்வு. எனவே இந்த காலையில் மறுபடியும் துவங்குவதில் நான் சந்தோஷமடைகிறேன். ஒரு வேளை இது கர்த்தருக்கு சேவை செய்வதில் இன்னொரு ஆண்டாக இது இருக்கக்கூடும். நீங்கள் இப்பொழுது எனக்காக ஜெபியுங்கள். இந்த காலை ஆராதனை முடிந்தவுடன், நான் உடனடியாக புறப்பட்டு கென்டக்கியில் உள்ள ஓவன்ஸ்பரோவிற்கு (Owensboro) சென்று இன்று மதியம் அல்லது இன்றிரவு ஒரு கூட்டத்தில் ஆராதனையை துவங்க இருக்கிறேன். எனவே இப்பொழுது கூட்டமானது அங்கேயிருந்து துவங்கி தொடர்ந்து போகிறதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் யூகிக்கிறேன். எனவே அதை நினைக்கும்போதே நாம் சந்தோஷமடைகிறோம். நாங்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். என்னவெனில், அவர் எனக்கு விடுமுறை நாட்களில் கொடுத்த அருமையான நேரத்திற்காகவும் இன்னும் மற்றெல்லாவற்றையும் குறித்து சொல்ல நான் விரும்புகிறேன். நான் ஓய்வு எடுத்த பிறகு கடந்த வருடங்களில் உணர்ந்ததை விட மிகவும் நலமாக உணர்கிறேன். ஊழியத்தைப் பற்றியதான எல்லாவற்றையும் என் சிந்தையிலிருந்து விலக்கினவனாய் முழுமையாக ஓய்வை எடுத்துக் கொண்டேன். அதை (ஊழியத்தை) சற்று விலக்கி இந்த சபையில் உள்ள சகோதரர்களுடன் சேர்ந்து அங்கே கொலொராடாவில் வேட்டையாடச் சென்றேன். மேலும் கிறிஸ்தவ வியாபாரிகள் என்னை ஓரிகானுக்கும் (Oregon) அங்கு இருந்து சல்மோன் ஆற்றிற்கும் கொண்டு சென்றது முழுமையான ஓய்வாக இருந்தது. நான் திரும்பவும் ஆயத்தமான உணர்வுடன் ஊழியத்திற்கு திரும்பி வந்திருக்கிறேன். 2நீங்கள் யாவரும் அறிந்துள்ளபடி நான் என்னுடைய ஆராதனைகளை மாற்றியிருக்கிறேன், அது செய்தித் தாள்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, இரட்சிப்புக்கு முன்னதாக தெய்வீக சுகமளித்தலைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அப்படி செய்யவில்லை, ஆனால் நான் பிரசங்க பீடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட பிறகு அநேகர் பீட அழைப்பையும் மற்ற காரியங்களையும் பெற வேண்டி இருப்பதை நான் அறிந்துகொண்டேன். அந்த அபிஷேகத்தின் கீழ், வகையறுத்தலின் போது நான் எப்பொழுது பீடத்தைவிட்டு போகிறேன் என்பதை கொஞ்சங்கூட அறியாமலிருக்கிறேன். எனவே அதன் பிறகு பீடஅழைப்பை கொடுக்க முடியாமல் போகிறது. ஆனால் அவர்கள் குற்ற உணர்வோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது எந்த ஒரு பீட அழைப்பும் அல்லது எதுவும் அவர்களுக்கு கொடுக்கப்படாமல் ஆயிரமாயிரம் முறை என்னுடைய கரங்களைவிட்டு நழுவிப் போய் வெறுமனே அவர்கள் கடந்துபோக வேண்டியதாயிருக்கிறது. எனவே கர்த்தருக்கு சித்தமானால் இது முதற்கொண்டு நானே பீட அழைப்பை கொடுக்கப் போகிறேன்.அதாவது சுகமளிக்கும் ஆராதனை இருக்குமானால், அதற்கு பிறகு தான் அது இருக்கும் எனவே என்னால்ஆத்துமாக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தெய்வீக சுகமளித்தலின் வழியில் அநேக காரியங்கள் செய்யப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். 3இப்பொழுது, தெய்வீக சுகமளித்தல் சரியானது. இந்த செய்தி சரியானது. இந்த நோக்கம் சரியானது. தெய்வீகசுகமளித்தலை பிரசங்கிக்காமல் முழு சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாது. அது வேதவசனமாயிருக்கிறது. அதை நாமெல்லாரும் அறிந்திருக்கிறோம். “கூரியர்” என்ற செய்திதாளிலிருந்து எனக்கு சற்று முன்புகொடுக்கப்பட்ட கட்டுரையை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். மருத்துவர்களைக் குறித்து கூறப்பட்டதை யாராவது படித்தீர்களா? தேவன் சுகமளிப்பவர் என்று விசுவாசிக்காத எந்த ஒருமனிதனும் மருத்துவப்பணி செய்வதற்கு தகுதி இல்லாதவர் என்று “அமெரிக்க மருத்துவ சங்கம்” இங்கே செயின்ட் லூயிவில்லில் அறிவித்திருக்கிறது. அதுதாமே அதன் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கிறது. இப்பொழுது, அதுதாமே இந்த வார செய்திதாளிலிருந்து... சகோதரி கெர்ட்டி, அதை நான் பெற்றுக் கொள்ளட்டும். அது திங்கள் அல்லது செவ்வாய்கிழமை என்று நினைக்கிறேன். அதை யாராவது பார்ப்பீர்களானால் அதிலிருந்து எனக்கு ஒன்றை கத்தரித்துக் கொடுக்க விரும்புகிறேன். என்னுடைய துணுக்கு சேகரிப்பு (scrap book) புத்தகத்தில் அதை ஒட்டி வைக்க விரும்புகிறேன். “தெய்வீகத்தில் விசுவாசமில்லாத மருத்துவம், அது கடைபிடிக்கபடுவதற்கு உரிமையே இல்லை” என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அது சரியே, மருத்துவ பணி செய்கிற அல்லது சொல்லுகிற மருத்துவர் தேவனை ஏற்றுக் கொள்ளாமலும், தேவனை விசுவாசிக்காதபட்சத்திலும் மருத்துவபணி செய்வதற்கு உரிமையே கிடையாது. அதுதாமே அமெரிக்காவில் உள்ள மருத்துவ உயர்மட்ட அதிகாரத்திலிருந்து அறிவிக்கப்பட்டதாயிருக்கிறது. 4சரி, நாம் எப்பொழுதும் அறிந்திருக்கிற அதே காரியத்தைதான், படித்த அவர்கள் எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யவில்லையா? (சகோதரன். பிரான்ஹாம் சிரிக்கிறார் - ஆசிரியர்) அவர்கள் எல்லாரும் படித்தவர்களும், பெரிய மனிதர்களும், புத்திசாதுரியமானவர்கள். அவர்கள் இவையாவற்றையும் பற்றி கொஞ்சகாலத்திற்கு பிறகு கடைசியில் அறிந்து கொள்கிறார்கள். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா?ஏனெனில் அதை நாம் நீண்ட நாட்களாக அறிந்திருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும், நமக்கு தெரியும்தானே? நாம் அதை அறிந்திருக்கிறோம். அவரே நம்முடைய நோய்களையெல்லாம் குணமாக்குகிறவர் என்று அதை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே கர்த்தர் கூறியிருக்கிறார். அதை இங்கே இப்பொழுது மருத்துவம், மருத்துவத்துறை தலைமையானது அது சரிதான் என்று கூறுகிறது. நான் இதை எப்பொழுதும் கூறியிருக்கிறேன். அதென்னவெனில், “தேவனில் விசுவாசமில்லாத மனிதன், நிச்சயமாகவே அவன் என் கரத்தை சரி செய்ய முடியாது” அது சரியே. உங்கள் கரத்தை சரி செய்ய, தேவனை விசுவாசிக்கிற வேறு எவராது ஒருவரை பற்றிக் கொள்ளுங்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், நிச்சயமாக தேவனை விசுவாசிக்கிறவர்தான் அதை செய்வார். ஆம் ஐயா. ஏனெனில் மருந்து சுகத்தை தராது. தேவனே சுகமாக்குகிறவர். இந்த சிறிய கட்டுரை எவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கேட்க வேண்டியதாக இருக்கிறது. அது அருமையாயிருக்கிறது. நான் என்னுடைய... எனக்கு கத்தரிக்கப்பட்ட அந்த ஒன்று தேவையாயிருக்கிறது. தெய்வீக சுகமளித்தலை குறித்து விளக்கி எழுதவேண்டும் என்ற வாஞ்சையை எப்பொழுதும் என் இருதயத்தில் கொண்டிருக்கிறேன். தெய்வீக சுகமளித்தலை பற்றி எழுதப்பட்ட ஒரு விளக்கம் கூட, எனக்கு தெரிந்தமட்டில் இந்த உலகத்தில் எந்த சந்தையிலும் இல்லை. மேலும் என்றாவது ஒரு நாளில் மலைகள் உள்ள இடத்திற்கு சென்று அங்கே நீண்ட நாட்கள் தங்கி தெய்வீக சுகத்தை குறித்ததான விளக்கத்தை எழுதி பின்னர் கீழே வந்து, அதற்கு சரியான வார்த்தைகளை பொருத்திமற்ற காரியங்களை செய்தும் அச்சிட்டு வெளியிடக் கூடிய கல்வியறிவு பெற்ற ஒருவரிடம் கொடுக்க விரும்புகிறேன். துவங்குவதற்கு அது ஒரு நல்ல காரியமாக இல்லையா? இந்த புத்தகத்திற்கான முன்னுரையை இது துவக்குகிறதாய் இருக்கிறது. எனவே,சகோதரி கெர்ட்டி நான் தொலைத்துவிடாத பட்சத்தில், அதை நான் உங்களிடத்தில் திரும்ப கொடுத்து விடுவேன்.நல்லது, உங்களுக்கு நன்றி. நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். அது சரிதான். எனவே நான் நிச்சயமாக அதை தொலைத்து போடாதபடிக்கு, அதை ஒரு சிறிய பிரதி எடுத்து வைக்கட்டும். 5என்னிடத்தில் நான் ஒன்றை வைத்திருக்கிறேன், அதை நான் கீழே வைத்துவிட்டு திரும்பவும் கொண்டுவர மறந்துவிட்டேன். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் அதை நான் பம்பாய் பட்டணத்திலிருந்து கொண்டு வந்தேன். அங்கே இந்தியாவில் உள்ள பம்பாய் பட்டணத்தில் அவர்களுக்கு பெரிய பூமி அதிர்ச்சி உண்டாயிருந்தது, அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளையும் மற்றவற்றையும் இழந்து போனார்கள். இன்னும், காரியம் என்னவெனில் இது நிகழ்வதற்கு முன் எல்லா பறவைகளும், காட்டு விலங்குகளும், முழுவதுமாக அந்த இடத்தைவிட்டு கடந்து சென்றன. அதன் பிறகு இவையாவும் நடந்து முடிந்தவுடன், அவையெல்லாம் திரும்பவும் அந்த இடத்திற்கு திரும்பி வந்தன. என்னே‚ தேவன் தன்னுடைய பறவைகளுக்கு அதிலிருந்து தப்பிப் போகும்படி அவைகளை எச்சரித்தார். பறவைகள் தேவனுடைய எச்சரிப்பை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அவருடைய பிள்ளைகளோ அதை ஏற்றுக் கொள்வதில்லை.பாருங்கள்‚ அவர்கள் அதற்கு செவிகொடுக்க மாட்டார்கள். பாருங்கள்‚ ஆனால் ஒரு பறவைகூட அந்த இடத்தில் இல்லாமல் எல்லாம் அந்த இடத்தைவிட்டு சென்றன. அவைகளில் ஒன்றாகிலும் கொல்லப்படவில்லை அல்லது வேறொன்றும் அவைகளுக்கு நிகழவில்லை. பின்னர் எரிமலை இன்னும் அதுபோன்ற கொந்தளிப்புகள் அடங்கின பின்பு அவையெல்லாம் திரும்பி வந்தன. பாருங்கள்‚ அவையெல்லாம் அந்த பேராபத்திலிருந்து தப்பிப் பிழைத்தன. எனவே அது எதை காண்பிக்கிறதென்றால் நோவாவின் நாட்களில்அவைகளை அழைத்த தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அவர் இன்றும் தேவனாக இருக்கிறார். 6இப்பொழுது, அறிவிக்கப்பட வேண்டிய வேறு காரியங்கள் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, ஆமாம். ஒரு உத்தமமான தேவனுடைய ஊழியக்காரரான நம்முடைய மேய்ப்பர், சகோதரன் நெவிலை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். ஒரு உண்மையான ஊழியக்காரன் கண்காணிப்போடு இருக்கிறான் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தன்னுடைய செம்மறியாட்டிற்கு ஏதாவது தவறு நடக்குமானால், உடனடியாக அதை காப்பாற்ற முயற்சிப்பான். அவ்விதமாகத்தானே அவன் செய்வான்? ஆனால் கூலிக்கு அமர்த்தப்பட்டவனோ பின்வாங்கி ஓடிப்போவதால், ஆபத்தான காரியம் நிகழ்ந்து செம்மறியாட்டை கொன்று போடவிடுகிறான். அது சரிதானே? ஆனால் உண்மையான மேய்ப்பனோ அதைப் பாதுகாக்கிறான். நான் அறிந்துக்கொண்டபடி, ஒரு சிறிய கைப்பிரதியானது இந்த வாரத்தில் இங்கே விநியோகிக்கப்பட்டு சபையின் அங்கத்தினர்களில் அநேகருக்கு அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதாமே மேற்கு விர்ஜினியாவில் இருந்து துவங்கினது. “ஒரு மனிதனையோ அல்லது ஒரு காரியத்தையோ அதிகமாக ஆராதனை செய்கிற” உபதேசத்தைக் (Cult) குறித்ததாயிருக்கிறது. அது ஒன்றுமில்லை. நண்பர்களே, அது ஒரு புதிதான காரியமல்ல அது ஏற்கனவே இருந்ததுதான். அவருடைய பெயர் இயேசு என்று இருக்கும்பட்சத்தில், இயேசு அல்ல என்று மறுதலிக்கிறார்கள். இப்பொழுது, இந்த மேய்ப்பர் இதை கண்டுபிடித்தவுடன் உடனடியாக ஓடிவந்து அதைக் குறித்து என்னிடத்தில் கூறினார். ஏதாவது காரியம் செய்தாக வேண்டும்? நல்லது, நிச்சயமாகவே இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் அவ்வளவாக ஸ்திரப்பட்டிருக்கிற சபை அதைக் காட்டிலும் நன்றாக அறிந்திருக்கிறது. பாருங்கள்‚ அதை அவர்கள் யாவே (Yahweh), யோசுவா (Joshua), யாவே என்று அழைக்கிறார்கள். 7இப்பொழுது, வயது சென்ற நம்முடைய அன்பு சகோதரன் ரய்ன் (Ryan) எப்பொழுதாகிலும் இங்கு வருவதுண்டு. அவரும் அந்த உபதேசத்தினால் குழம்பியிருக்கிறார். நம்முடைய ஐக்கியத்தில் ஒருவிசை இருந்த திருமதி. லார்ஸன் அவர்களும் அதில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் அது ஒரு பெரிய கூட்டமாக வளர... இப்பொழுது கிறிஸ்தவ நண்பர்களே, “யோசுவா” என்ற வார்த்தையானது... அவர்கள், வேதாகமம் தவறாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது, தவறாக வியாக்கியானம் செய்யப் பட்டிருக்கிறது என்று இன்னும் அது போன்ற காரியத்தை கூறுகிறார்கள். கவனியுங்கள். வேதாகமம் தவறாக அச்சிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் கூறுகிற காரியத்திற்கு கவனத்தை செலுத்த வேண்டாம். “தவறாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது”, என்று அவர்கள் கூறுகிறபடி இது தவறாக அச்சடிக்கப்பட்டிருக்குமானால் உங்களுடைய விசுவாசம் எதைச் சார்ந்து இருக்கிறது? இது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அது சரியாக அவ்விதமாகத்தான் இங்கே இருக்கிறது. பாருங்கள்‚ மேலும் அதை மட்டுமே நான் விசுவாசிக்கிறேன்... இப்பொழுது, இங்கே ஒரு உண்மையிருக்கிறது. இங்கே சில நாட்களுக்கு முன் என்னிடத்தில் ஒரு சீமாட்டி வந்தார். அவள் தாமே, அவருடைய பெயர் இயேசு (Jesus) என்பதை விசுவாசிக்கவில்லை. அவளோ, அவருடைய பெயர் யெகோவா ஜீனியர் (Jehova Jr.) என்று இருக்கவேண்டும் என்றாள். நான் சீமாட்டியே... நண்பர்களே அது என்னவாயிருக்கிறது என்று பாருங்கள். அவ்விதமான சிந்தையை பெற்றவர்கள், கொள்கைகளை (isms) ஏற்றுக் கொள்வதற்கு ஆளாவார்கள். முதலாவது அவர்களுக்கு என்ன காரியம் நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா, தவறான உபதேசத்தை விசுவாசிக்கிற வஞ்சனையின் ஆவியை பெற்றுக் கொண்டு, வழிவிலகிப்போய், அந்த பிழையை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் அவ்விதமான ஏதோ காரியத்தை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாகுகிறார்கள். அதை ஒருபோதும், ஒருபோதும் செய்ய வேண்டாம். திடமாயிருங்கள். பாருங்கள் - கிறிஸ்துவுக்குள் நிரம்பினவர்களாய், திடமாயும் அசைக்கப்படாமலும் இருங்கள். 8இப்பொழுது என்னுடைய ஜீவியத்திலேயே என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்காமல் வெளியே அனுப்பின முதல் நபர் இந்த ஸ்திரீ தான். நான், “நீங்கள் இங்கே வந்து, அதை தவிர வேறு காரியத்தை உங்களால் பேச முடியவில்லையென்றால் நீங்கள் இங்கே வரவேண்டாம்” என்று அவளிடத்தில் கூறினேன். ஏனென்றால் அதுதாமே... நான் இயேசு கிறிஸ்துவை, தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன், மேலும், “என்னுடைய விசுவாசம் அதன்மேல் கட்டப்பட்டிருக்கிறது”, என்றேன். ஆனால் இப்பொழுது, நீங்கள் இந்த வார்த்தையை தனியாக பிரித்து எடுத்துப் பார்ப்பீர்களானால் அதை உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும். “யோசுவா” (Joshua) என்பதின் சரியான வார்த்தை, “யோசு-உ-ஆ” (Josh-u-a) என்பதாகும்.(சகோ. பிரான்ஹாம் மக்களுக்கு அந்த வார்த்தையை உச்சரித்துக் காட்டுகிறார்) பாருங்கள். இப்பொழுது, நான் இங்கே ஒன்றை கூற விரும்புகிறேன். “ஓல்கா ஹீவா”. அங்கே பின்னால் இருக்கிற பில்லிபாலை தவிர வேறு யாருக்காவது இதன் அர்த்தம் தெரியுமா என்பதை நான் சந்தேகப்படுகிறேன். கீட்டோஸ் (Kiitos) என்ற வார்த்தையின் அர்த்தத்தை வேறு யாராவது அறிந்திருக்கிறீர்களா? பையு டாங்கி (baie dankie) என்ற வார்த்தையின் அர்த்தத்தை வேறு யாராவது அறிந்திருக்கிறீர்களா? டாங்கிஷான் (dankeschon) என்ற வார்த்தையின் அர்த்தத்தை வேறு யாராவது அறிந்திருக்கிறீர்களா? ஒரு கரம், “டாங்கி” (danke) என்பதற்கு - இரண்டு. சரிதான். “நன்றி” (Thank you) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? அதைத் தான் நான் ஒவ்வொரு முறையும் கூறினேன். “ஓல்கா ஹிவா, கீட்டோஸ், டாங்கிஷான், பையு டாங்கி” பாருங்கள்‚ இவையெல்லாவற்றின் அர்த்தம் “நன்றி” (Thank you) என்பதாகும், ஆனால் அதை (நன்றி) நான் வெவ்வேறு மொழியில் கூறினேன். “யோசு-உ-ஆ” என்பது எபிரெய மொழியில் இயேசுவின் நாமத்தை (பெயர்) குறிக்கும். அவ்வளவுதான். அதுவே ஆங்கிலத்தில் இருக்குமானால், அது “Jesus” (இயேசு) என்று அழைக்கப்படும். அதற்கு அர்த்தம் 'யோசு-உ-ஆ“ (Josh-u-a). யோசுவா (Joshua), 'யோ-சு-ஆ” (Josh-u-a) இந்த இரண்டும் ஒன்றுதான். பாருங்கள். 9இப்பொழுது, “சரி, அதை நீங்கள் எபிரெய மொழியில் தான் சொல்லவேண்டும்” என்று நீங்கள் கூறுவீர்களானால், பின்னர் மற்ற எல்லாவற்றையும் (வார்த்தைகளை) நாம் எபிரெய வார்த்தையில் தான் கூறவேண்டியிருக்கும். பாருங்கள்‚ அதன் பின் நாமெல்லாரும் எபிரெய மொழியை கற்றுக்கொண்டு, எபிரெயம் (Hebrew) உலகளாவிய பேச்சு மொழியாக இருக்கும்படி செய்யவேண்டும். ஆனால் அது எவ்வளவு அற்பமானதாய் இருக்கிறது, பாருங்கள். அப்படிச் செய்வதால் ஒரு பயனும் இல்லை பாருங்கள்‚ அது, “யோசுவா” 'யாவே“. யாவே (Yahweh) என்றால் ”தேவன்“(God) எனப்படும். யா (Yah), யாவே (Yahweh), யோசுவா (Joshua) இவையாவும் ”தேவனை“ (God) குறிக்கும் எபிரெய வார்த்தைகளாகும். ஆனால் நாம் அதே வார்த்தையில் (மொழியில்) குறிப்பிட வேண்டுமானால், நாம் ”இயேசுவை“ (Jesus), ”யோசு-உ-ஆ“ (Josh-u-a) என்று சொல்லவேண்டும். பாருங்கள் ”யோசு-உ-ஆ“, இயேசு. இப்பொழுது நான் ஒரு எபிரெயனிடத்தில் பேசும்போது அவன் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளாததால், நான் எதை கூறுகிறேனோ அதை அவன் புரிந்துக் கொள்ளும்படிக்கு அவனிடத்தில் (Josh-u-a) யோசு-உ-ஆ, (Joshua) யோசுவா என்று நான் கூறவேண்டியதாயிருக்கிறது. ஆனால் இந்த காலையில் உங்களிடத்தில் பேசும் போது, “யோசு-உ-ஆ” என்று நான் சொல்வேனாகில், நான் கூறினதை குறித்து நீங்கள் வியப்பீர்கள். நான் “இயேசு” (Jesus) என்று சொல்லவேண்டும். பாருங்கள்‚ அது அதே வார்த்தை, அதே பொருள்தான். எனவே இவையெல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்க வேண்டாம்... உங்களுக்கு தெரியும் கர்த்தருடைய வருகைக்கு முன்னதாக இவ்விதமான காரியங்கள் இருக்கும் என்று வேதாகமம் கூறின. அதன்படியே இவையாவும் எழும்புகிறது. 10இங்கேகொஞ்ச நாட்களுக்கு முன்னதாக போதிக்கும்போது, அது இங்கே எங்கோ ஓரிடத்தில் என்று விசுவாசிக்கிறேன், இப்பேற்பட்ட ஆவிகள் ஆதியாகமத்திலிருந்து துவங்கினதை, எப்படியாக அதை ஆதியாகமத்திலிருந்து உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். இவை யாவும் அங்கிருந்து புறப்பட்டு வெளி வந்தது. இன்றைக்கு உலகத்திலிருக்கிற ஒவ்வொரு “மதஅடிப்படையிலான ஒரு நபரை அல்லது ஒரு காரியத்தை ஆராதிப்பது” (Cult) ஆதியில் ஆதியாகமத்தில் துவங்கினது. (பாருங்கள் அது சரிதான்,) ஒவ்வொன்றும், பாபிலோனும் அங்கிருந்துதான் துவங்கினது. வெவ்வேறுபட்ட எல்லா உபதேசங்களும் (ites) இன்னும் அது போன்ற ஒவ்வொன்றும், இவையாவும் அங்கே துவங்கினது. அந்த எல்லா வித்தியாசமான கடவுள்களும் இன்னும் அது போன்றவைகளும். அவர்கள் மரங்களின் வேர்கள் (roots) இன்னும் மற்றவைகளை கூடஆராதிக்க துவங்கினார்கள். அப்பேற்பட்ட காரியங்கள் சரியாக அங்கேயிருந்து தான் துவங்கின. அவர்கள் என்ன செய்தார்கள் என்ற சுபாவத்தைக் கவனியுங்கள். அவர்கள் அங்கே என்ன செய்தார்கள் என்றும் எவ்வாறாக அவர்கள் ஆராதித்தார்கள் என்றும் வரலாற்று ஊடாக ஆராய்ந்து இன்றைக்குரியதுடன் ஒப்பிட்டு பார்ப்பீர்களானால், அது தாமே வேறொரு (Cult) மத அடிப்படையிலான ஒரு நபரையோ அல்லது ஒரு காரியத்தையோ ஆராதிப்பதின் கீழாகவோ, கிறிஸ்தவத்தின் கீழாகவோ, இன்னும் அதுபோன்ற காரியத்தின் கீழாக பாவனை செய்யபடுவதை (impersonating) நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 11எனவே, இதை ஞாபகத்தில் வைத்துக் கொள் என் அருமையான கிறிஸ்தவ நண்பனே, எப்படியெனில் நான் இங்கே ஒரு வஞ்சகனாக (deceiver) நிற்க விரும்பவில்லை. அப்படியிருப்பதை விட நான் இங்கே மலையிலேயே இருந்திட விரும்புகிறேன். ஆனால், நான் சத்தியம் என்னவென்பதை அறிந்திருக்கிறேன். சற்றுமுன்பாக ஒரு சகோதரனைப் போன்ற ஒரு மனிதன் கொடுத்த ஒரு புத்தகத்தை தேவனுடைய வார்த்தையின் மேல் நான் வைத்த போது கர்த்தருடைய தூதனானவர் சற்று முன்பாக என் பக்கத்தில் வந்து நின்று, “அதை அங்கிருந்து எடுத்து விடு” என்றார் என்பதை நியாயத் தீர்ப்பின் நாளில் என்னை தீர்ப்பு செய்கிற சர்வ வல்லமையுள்ள தேவன் அறிவார். அது சரியானது அல்ல என்பதால் அவருடைய வார்த்தையுடன் அது சம்மந்தப்பட்டிருப்பதை விரும்பவில்லை. அது உண்மை. ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், சகோதரன் நெவிலின் அலுவலகத்தில் என்னுடைய நாற்காலிக்கு அருகாமையில் கர்த்தருடைய தூதனானவர் என்னிடத்தில் வந்து, அந்த காரியத்தை (புத்தகத்தை) அவருடைய வார்த்தையினிடத்திலிருந்து அகற்றிவிடும்படி செய்தார் என்பதை, நாமெல்லாரும் நியாயத்தீர்ப்பின் நாளில் சந்திக்கும்போது அதை அறிந்துக் கொள்வோம். அதுமிகவும் சரி. பாருங்கள்‚ அப்படிப்பட்ட காரியங்கள், அது சரியானதாக இல்லை. அந்த புத்தகத்தை படிக்கும்படி எனக்கு அந்த மனிதன் கொடுத்தார். அந்த மனிதன் இந்த சபையில் உள்ள ஒரு சகோதரனாயிருக்கிறார். அவர், “அதை படித்துப் பாருங்கள்”, என்றார். இப்பொழுது, அதை வெறுமனே என் கையில் எடுத்துக் கொண்டேன். அவ்வளவுதான் எனக்கு தெரியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர், “அது சரியானது இல்லை”, என்பதை அறிந்திருந்தார், எனவே அது சரியானது இல்லை. எனவே நாமும் கூட... இதோ இங்கே தேவனுடைய வார்த்தை இருக்கிறது. இதற்கு புறம்பாக... நம்முடைய விசுவாசம் அதன் மேலாககட்டப்பட்டிருக்கிறது, அப்படி இல்லையா? 12அடுத்த அறிவிப்பானது... நான் நம்புகிறேன், இந்த வாரத்தை குறித்து நினைக்கையில், நான் அதை துவங்கப் போவதில்லை அல்லது நான் உங்களுக்கு வாக்களித்தபடி இங்கே வந்து ஒரு சில இரவுகள் கூடாரத்தில் இருப்பதைக் குறித்த உணர்வையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு வேளை அதை சற்று காலதாமதமாக செய்யலாம். ஆனால், அன்றொரு நாளில் சகோ. ரைட்ஸிடம் வந்த எளிமையான, ஒரு நேசமுள்ள சகோதரன் அங்குள்ள புதர்கள் ஊடாக சிரமபட்டு சகோ.ராய் ராபர்ஸன் மற்றும் என்னிடத்தில் வந்தார். அவர் மோசமான நிலையில் இருந்தார். மேலும் அவர், நான் அங்கு சென்று அவருக்காக ஒரு சில இரவுகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவர், சகோதரன் ரோஜல்ஸ் எட்டு நாட்களுக்கு கூட்டத்தை அறிவித்து, நாம் கடந்த முறை கூட்டம் நடத்தின ஓவன்ஸ்பரோவில் இருந்த விளையாட்டு மைதானத்தை அவர் எடுத்திருந்தார், நான் அவரிடத்தில் அவ்விதம் செய்யவேண்டாம் என்றும் நான் இரண்டு இரவுகள் எடுத்துக்கொண்டு அதை அவருடைய சபையில் நடத்த வேண்டும்என்றும் கேட்டுக் கொண்டேன். நான், “சரி, நான் உபவாசிக்கவும், ஜெபிக்கவும் இல்லை” என்று கூறினேன். அவர், சகோதரன். பிரான்ஹாம் நீங்கள் வந்து ஒரு பாடலை பாடினால் அது போதும், என்றார். ஆகவே அந்த அளவுக்கு என்னை அவர் நேசிப்பதால், நான் இன்று மதியம் புறப்பட்டுச் சென்று அவருக்கு உதவப் போகிறேன். எனக்காக ஜெபியுங்கள், கொஞ்சம் அதிக நாட்கள் அங்கு தங்கலாம், ஆனால் நான் இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்று அறிவித்திருக்கிறேன். எனவே நான் எவ்விதமாக செய்யவேண்டும் என்று தேவன் உரைத்திருக்கிறாரோ அவ்விதமாகவே செய்ய விரும்புகிறேன். நண்பர்களே, ஐம்பது வயதில் அங்கு என்னுடைய சகோதரன் படுக்கையில் இருப்பதை காணும்போது, அடுத்து எனக்கும் நாற்பத்தாறு வயது ஆக போவதை அறிந்த நான் அது வரைக்கும்... இப்பொழுதிலிருந்து அது அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை என்று உணர்கிறேன். நான் தொடர்ந்து ஜீவிப்பேனேயாகில் இப்பொழுது நான் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது போல இருப்பதற்கு இன்னும் எனக்கு அதிக நாட்கள் இல்லை. நான் நிச்சயமாக வயதானவனாகி விடுவேன். எனவே அவ்விதமாக என்னால் செய்யக் கூடாமற் போகும்.நான் ஒரு முறை மட்டும் ஜீவிக்கக் கூடியவன் என்பதை தெரிந்துக் கொண்டவுடன், என்னுடைய (ஜீவிய) நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தராகிய இயேசுவுக்காக எண்ணப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, உங்களில் யாராவது ஒருவர், “நல்லது, அப்படியானால் நீங்கள் ஏன் மலை மேல்போய் இருக்கலாமே?” என்று கூறலாம். நல்லது, என் சகோதரனே, அவ்விதமாக நான் அங்கே மேலே போகவில்லையென்றால், இன்னும் நீண்ட தூரத்தை அடைவதற்கு முன்னதாகவே (தொடர்ச்சியான உழைப்பினிமித்தம்) நான் பாதிப்புக்குள்ளாகி விடுவேன் என்று பயப்படுகிறேன். நீங்கள் ஓய்வு எடுத்தாக வேண்டும். இந்த காலையில் இங்கே எங்கேயோ இருக்கிற என்னுடைய மனைவியினிடத்தில் வரும்போது இவ்விதமாக கூறினேன், “உனக்கு தெரியும், நான் அந்த மலைகளுக்கு உள்ளாக போகும்போது இருந்ததைக் காட்டிலும் அதை விட்டு வெளியே வரும்போது சிறப்பான கிறிஸ்தவனாக இருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்”. சிலர் என்னிடத்தில் வந்து, “சரி, நீங்கள் இதை மற்றும் இது போன்ற காரியத்தை செய்ய வேண்டும் என்று தேவன் உங்களிடத்தில் கூறியிருக்கிறார்” என்று எனக்கு கூறினார்கள். அதுதாமே என்னை முற்றிலும் குழப்பிபோட்டது. ஆனால் நான் மலையைவிட்டு வந்தபிறகு இளைப்பாறினவனாக இருக்கிறேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். உங்களுக்கு தெரியும், அதுதாமே உங்களை மறுபடியும் இயல்பான (normal) நிலைக்கு கொண்டு வருகிறது. அதுதான் நல்லது. சகோதரன் நெவில். 13இப்பொழுது, இன்னும்... என்னால் முடிந்த சிறந்த வழியில் தொடர்ந்து போக முயற்சிக்கிறேன். ஓ, ஆமாம், ஞாயிறு பள்ளி வகுப்புகள்... இப்பொழுது, அவர்கள் எங்கே போகிறார்கள். சகோதரன். நெவில்? ஞாயிறு பள்ளி வகுப்பைச் சேர்ந்த சிறு பிள்ளைகளும் அதைச் சேர்ந்தவர்களும் கட்டிடத்தின் பின் பகுதிக்கு செல்வார்கள். பெரியவர்கள் சற்று முன்பாக வர விரும்பினால், ஏன், அதுஉங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாயிருக்கும். இந்த காலையில் நீங்கள் சிறு பிள்ளைகளை ஞாயிறு பள்ளிக்கு அனுப்ப விருப்பமுடையவர்களாய் இருப்பீர்களானால், எனவே உடனடியாக அவர்களை நீங்கள் அங்கு அனுப்பலாம். அங்கே அவர்களுக்கு வேறொன்றையும் போதிக்காமல் கர்த்தராகிய இயேசுவை மட்டும் போதிக்கும் ஞாயிறு பள்ளி ஆசிரியர் உண்டென்று நான் நிச்சயமுடையவனா யிருக்கிறேன். 14இப்பொழுது,ஆரம்பிப்பதற்கு முன்னதாக பெரியவர்களாகிய நாம் தாமே சங்கீத புத்தகத்திலிருந்து வாசிப்போம்.அதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? நாம் சங்கீதம் 70-ம் அதிகாரத்துக்கு திருப்புவோம்.இது ஒரு குறுகிய அதிகாரமாய் நம்முடைய வேதத்தில் இருக்கிறது. இந்த அற்புதமான சங்கீதத்திலிருந்து வாசிப்போம்: சங்கீதம் 70. நான் எதேச்சையாக அதை திருப்பின போது இந்த வேதவாக்கியம் எனக்கு முன்பாக வந்தது. அதை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று நான் யூகிக்கிறேன். இப்பொழுது, எப்பொழுதும் செய்வதுபோல நாம் எழுந்து நின்று, நான் முதல் வசனத்தை வாசித்தபிறகு அடுத்த வசனத்தை நீங்கள் வாசியுங்கள். இவ்விதமாக நாமெல்லாரும் சேர்ந்து கடைசி வசனம் வரைக்கும் வாசிப்போம். இப்பொழுது, இந்த சங்கீதத்தை வாசிக்கையில் நாம் எல்லோரும் எழுந்து நிற்போமாக. முடிவில் இதை வாசித்த பிறகு நாம் மாதிரி ஜெபத்தை ஏறெடுப்போம். தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்கு சகாயஞ் செய்யத் தீவிரியும். (சபையார் சத்தமாக வாசிக்கின்றனர்: என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக: எனக்கு தீங்கு வரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப் போவார்களாக. (சபையார் சத்தமாக வாசிக்கின்றனர்: உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதா கஎன்று எப்பொழுதும் சொல்வார்களாக (எல்லோருமாக சேர்ந்து) நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும். இந்த மாதிரி ஜெபத்தை நாம் எல்லோருமாக சேர்ந்து மறுபடியும் ஏறெடுக்கும் போது நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. (சபையார்சத்தமாக திருப்பி சொல்கின்றனர்) பரமண்டலங்களிலிருக்கிறஎங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடையசித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட்பட பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். 15இப்பொழுது நீங்கள் அமரலாம். மேலும் என்னுடைய கூட்டங்களை இப்பொழுது சரியாக அமைத்திடவும், அவருடைய சித்தத்தில் பரிபூரணமாக இருக்கும்படியும், அந்த கூட்டங்கள் பரவ வேண்டிய விதத்தில் ஏன் பரவாததையும்; எனக்கு தெரியாத காரியங்களை பற்றியும் கச்சிதமாக சுலபத்தில் அறிந்து கொள்ள தேவன் எனக்கு உதவிடும்படி ஜெபிக்க இப்பொழுது மறந்து விடவேண்டாம். இப்பொழுது, இன்றைக்கு ஒரு குறுகிய செய்தியை பார்க்கலாம் என்று நான் விசுவாசிக்கிறேன். வெவ்வேறு கோணத்தில் வேதாகமத்தை பார்க்க எத்தனை பேர் பிரியப்படுகிறீர்கள்? நீங்கள் விரும்புகிறீர்களா? நல்லது. அது அருமை. அப்படியானால் பரிசுத்த யோவான் புத்தகத்திலிருந்து துவங்குவோம். கூடாரத்துக்கு வந்தவுடன் நான் இங்கே மேலே (பீடத்துக்கு) வரும் வரைக்கும் எதை பேசுவது என்று அறியாமலிருந்தேன். இப்பொழுது நாம் யோவான் 3-ம் அதிகாரத்துக்கு திருப்புவோம், அதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அது யோவான் 3-ம் அதிகாரம், 14-ம் வசனம் வரை மட்டுமா என்று நான் நிச்சயப்படுத்திக் கொள்ள அதை பார்க்கட்டும். ஆம் அதைத்தான் நான் படிக்க விரும்புகிறேன். சற்று முன்பு நான் உட்கார்ந்து கொண்டு, இருந்தபோது கர்த்தருடைய நன்மையையும், நமக்கு அவர் எவ்வளவு மகத்தானவராக இருந்தார் என்றும், இப்பொழுது நமக்கு அவர் என்னவாயிருக்கிறார் என்றும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம்மால் கூடுமானால் சரியாக காரியத்தை அணுகும்படிக்கு என்னால் முடிந்த அளவு இதை சுருக்கமாக கூற முயல்வேன். பின்னர் சுகமளிக்கும் ஆராதனை அல்லது வியாதியஸ்தர்களுக்கான ஜெபம் நமக்கு இருக்கும், இந்த காலையில், தேவையுள்ளோர் அநேகர் இருக்கிறார்கள் என்றும், சிலர் அவர்களை வெகு தொலைவிலிருந்து ஜெபத்திற்காக அழைத்து வந்திருக்கிறீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறேன். கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் நம்மை நோக்கிப்பார்த்து, இக்காரியங்களில் நமக்கு வழிகாட்டியிருப்பதால் அவரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்டதை நம்முடைய எல்லா சக பிரஜைகளோடு (citizens) அதை பகிர்ந்துக்கொள்ள நாம் விரும்புகிறோம். 16எனவே, இப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், நான் செய்தியின் பொருளுக்காக, அடுத்து எந்த வேத வசனத்தை உபயோகிப்பது என்று அறியாமலிருந்தேன், ஆனால் “நியாயத்தீர்ப்பினால் மீட்பு” என்ற இத்தலைப்பில் அது எனக்கு வந்தது. நல்லது, அநேக நாட்களுக்கு முன்னதாக இங்கே “கிருபையினால்மீட்பு”, “பாவபரிகாரத்தின் மூலமாக மீட்பு” என்பதின் பேரில் நாம் போதித்தோம். மேலும் நான் “நியாயத்தீர்ப்பினால் மீட்பு” என்பதின் பேரிலும் சிந்திக்க தொடங்கினேன். இப்பொழுது, இங்கே பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில் இயேசு பேசுகிறதை, நாம் 10-ம் வசனம் முதற்கொண்டு வாசிப்போம். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்திலிருந் திறங்கினவரும் பரலோகத்திலிருக் கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. 17இப்பொழுது, நான் சபையோரை இவ்வேளையில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பூமியின் மீதாக இருக்கிற மனுஷகுமாரன், எப்படி அவரால் பரலோகத்திலும் பூமியின் மீதும் ஒரே சமயத்தில் இருக்க கூடும்?பரலோகத்திலிரு க்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல்... ஆனால் இங்கே அவர் பூமியின் மீது நின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு சமயம் யாரோ ஒருவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், தேவன் தாமே கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்தை தனக்குத்தானே ஒப்புரவாக்கினார் என்றும், தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார் என்றும் நீங்கள் நினைப்பீர்களானால், பின்னர் ஏதேன் தோட்டத்தில் யாரிடத்தில் அவர் ஜெபத்தை ஏறெடுத்தார்? என்று கேட்டார். அதற்கு அந்த சீமாட்டியிடம், நான் இந்த கேள்வியைக் கேட்டேன்: “அப்படியானால் அவர் பரலோகத்தில் இருந்து கொண்டு, இங்கே நிக்கோதேமுவினிடத்திலும் ஒரே சமயத்தில் எப்படி அவரால் பேசமுடிந்தது”. பாருங்கள்‚ அவர் ஜெபத்தை மட்டும் ஏறெடுக்கவில்லை. அவர் ஜெபத்திற்கு பதிலும் கொடுத்தார்... பாருங்கள், அவரே அவருடைய ஜெபத்திற்கு பதில் அளித்தார். பாருங்கள். சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும் அதுதாமே மிகவும் அருமையான காரியமாக இல்லையா: வெண்கல சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவன் அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும் 18நாம் மரித்தபிறகு அது எவ்விதமாக இருக்கும் என்று எனக்கு இன்னுமாக வெளிப்படுத்தப்படவில்லை. மரணத்துக்குப் பின் நமக்கு எவ்விதமாக நிகழும் - விதி (fate) என்பதை அறிந்து கொள்ள மனுபுத்திரர்களுக்கு இந்நாள் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் விசுவாசிப்பதில்லை. நாம் மரித்த பிறகு, உயிர்த்தெழுதலின் மூலமாக சரீரத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்வரை, நாம் ஆவியாக இருப்போம் என்று அநேக மக்கள் நினைத்தார்கள். ஆனால் அது அப்படி இல்லை, ஏனெனில், இந்த பூமிக்குரிய கூடாரமானது அழிந்துபோகுமானால் நமக்காக ஒன்று ஏற்கனவே காத்துக் கொண்டிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்‚ நாம் போகத்தக்கதாக ஒருவகையான சரீரம் இருக்கிறது. அது ஆவி அல்ல, ஆனால் நம்முடைய ஆவி ஒரு சரீரத்துக்குள்ளாக போகின்றது. இப்பொழுது, மற்றொன்றை ஒன்றோடு பிரதிநிதித்துவப் படுத்தியும் அல்லது அடையாளப்படுத்தியும் (types), அவ்விதமாக பேசுபவராக (typolosit) இருப்பதால், இப்படியாக நாம் விசுவாசிக்கிறோம்: எப்படியெனில்தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார் அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதாகும். நியாயப்பிரமாணம், கிறிஸ்தவ யுகம், பரிசுத்த ஆவியுகம் என்னும் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து ஒரு நபரை முத்தன்மை (மூன்று தனித்தன்மை) கொண்டவராக (triune personality) ஆக்குகின்றது. 19இப்பொழுது, எனவே மூன்று கர்த்தருடைய வருகை இருக்கிறது. முதலாவதாக கர்த்தராகிய இயேசு தன்னுடைய மணவாட்டியை மீட்டுக் கொள்வதற்காக வந்தார். இரண்டாவதாக தன்னுடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ள வருகிறார். மூன்றாவதாக தன்னுடைய மணவாட்டியோடு வருகிறார். பாருங்கள்‚ அடுத்த வருகையில் அவர் பூமிக்கு வரப் போவதில்லை நாம் தான் அவரை ஆகாயத்தில் (air) சந்திக்கும்படிக்கு எடுத்துக்கொள்ளப்படப் போகிறோம். அந்த அருமையான ரெபேக்காளின், கதையில் அவள் எப்படியாக அந்த ஒட்டகத்தின் மேலேறி ஈசாக்கை சந்திக்கும்படி எலெயசரோடு புறப்பட்டு சென்றாள் என்று பாருங்கள். ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருந்தும் ஆபிரகாமின் ஆஸ்திகளுக்கும் அவனுக்குரிய எல்லாவற்றிற்கும் அவன் வாரிசானான். சாயங்காலத்தில் அவன் அங்கே வெளியில் (field) இருந்தான். அங்கே அவன் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தபோது, அழகான ரெபேக்காள் ஒட்டகத்தின் மேல் வருவதைப் பார்த்தான். ஓ, என்னே அதுதாமே எனக்குள் ஒரு விதமான குளிர்ச்சியை ஊடுருவி போகச் செய்கிறதாயிருக்கிறது. அந்த அழகான ரெபேக்காளை அவன் பார்த்ததுமில்லை அவள் யார் என்று கூட அவன் அறிந்ததுமில்லை, ஆனால் எலெயசரோ அவளை தேடிக்கொண்டிருந்தான். அவன் பரிசுத்த ஆவியின் சாட்சி பகர்தலினால் (நம்புவதற்குரிய ஆதாரம்) அவளை கண்டுபிடித்தான். அவன், “தேவனே, நான் என்னுடைய எஜமானுக்கு மனைவியை கண்டுபிடிக்கும்படிக்கு எனக்கு இன்று தயைசெய்யும் என்று ஜெபித்தான். அதன் பின் ரெபேக்காள் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்க்க வந்தாள், அது தாமே அவள் போவதற்கு விருப்பத்தை தெரிவிக்கும் அடையாளமாயிருந்து, ஒட்டகத்தின் மேல் ஏறி (ஈசாக்கை) சந்திக்கப் புறப்பட்டாள். அவனோ (ஈசாக்கு) தன் தகப்பனாரின் வீட்டிலிருந்து, பாதிவழியில் அங்கே வெளியில் வந்துக் கொண்டிருந்தான். 20ஒருவேளை இயேசு (இதை நான் இப்படியாக சிந்தித்துப் பார்க்க ஆசைபடுகிறேன். நான் அதை சொல்லக் கூடாது) ஏற்கனவே மகிமையைவிட்டு, நட்சத்திரங்கள் இன்னும் அது போன்றவைகளின் வழியாக பூமியை நோக்கி இறங்கி வந்துக் கொண்டிருக்கலாம். வரும் நாட்களில் ஒன்றில், அது இன்றாகக் கூடஇருக்கலாம், இன்னுமாக அவர் பார்க்காத அந்த சபையை, பரிசுத்த ஆவியானவர் மட்டுமே அதைக் குறித்து சாட்சி பகர்ந்திருக்கிறபடி... பாருங்கள். கவனியுங்கள், ரெபேக்காள் ஈசாக்கை கண்டவுடன் தன் முகத்தை மறைத்து (veiled) ஒட்டகத்திலிருந்து குதித்து அவனை சந்திக்கஓடினாள். அது தாமே முதல் முறை கண்டவுடன் காதலாய் (love) இருந்தது. அவர் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. அவர் பருமனான மனிதனாய் இருக்கக்கூடும்; அவர் சிறிய மனிதனாக இருக்கக்கூடும்; அவர் பழுப்பு, வெள்ளை, கருப்பு நிறத்தில் இருக்கக்கூடும். அவருடைய நிறம் என்ன; எவ்விதமான தலை முடியையுடையவர்; அவருடைய கண்களின் நிறம் என்ன என்று எனக்குத் தெரியாது; இருப்பினும் நான் அவரை நேசிக்கிறேன். அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை; நான் அவரை நேசிக்கிறேன். ஆம், ஐயா. சபை அவரை நேசிக்கும். அவர் வெள்ளை தந்தம் போன்ற மாளிகைகளை விட்டு தன்னுடைய மணவாட்டியை பெற்றுக் கொள்ள வந்துக் கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். அதன் பின் நாம் தாமே கர்த்தரை சந்திக்கும் படிக்கு ஆகாயத்தில் (air) எடுத்துக் கொள்ளப்படுவோம். அது சரிதானே? அதன் பின் ஈசாக்கு ரெபேக்காளை திருமணம் செய்ய அழைத்துக் கொண்டு சென்றது போல நாமும் மணமுடிக்க உள்ளே செல்வோம். அதன்பின் அவர்கள் திருமண வைபவத்திலிருந்து வந்தவுடன், அவன் சுதந்தரித்துக் கொள்கிறவனானான். அப்படியே இயேசுவும் தன் மணவாட்டியுடன் ஆயிர வருட அரசாட்சியில் தன் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்ய வரும் போது, அவர் தாமே அவளோடு கூட ராஜாவும் ராணியுமாக வருவார். 21இப்பொழுது, சரீரத்திலும் அதேவிதமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். முதல் சரீரமாகிய இயற்கையான, சாவுக்கேதுவான, பாவத்தினால் உண்டான சரீரம் நமக்கு கொடுக்கப்பட்டது. அடுத்து நமக்கு மகிமையான சரீரம் கொடுக்கப்படுகிறது, அது தாமே விசுவாசிகளாகிய கிறிஸ்தவர்கள் மரித்த பின் போகக்கூடிய ஒருவிதமான சரீரமாக இருக்கிறது. அது சரியாக மாம்சம் என்று சொல்லமுடியாது. அது தொடக்கூடியது (tangible) என்றும் நான் சொல்லமாட்டேன், இருப்பினும், அது அசலானதாக (Real) இருக்கிறது. முடிவில், உயிர்த்தெழுதலின் போது அந்த சரீரம் களிமண் கூடாரத்தை (tabernacle of clay) எடுத்துக் கொள்ள திரும்பி வரும்.அதன் பின் நாம் அவருடைய சாயலில் (In His likeness) என்றென்றைக்கும் நிலைத்திருப்போம்.ஓ‚ அது மிகவும் அருமையாய் இருக்கிறது. கவனியுங்கள்.“சகோதரன் பிரான்ஹாம், அது...” என்று நீங்கள் கூறலாம். பாருங்கள், அது ஆவியாக இருக்குமானால் அதை உங்களால் காண முடியாது. ஆனால் அது ஆவி அல்ல. கவனியுங்கள். எந்தோரின் சூனியக்காரி சாமுவேலின் ஆவியை அழைத்தபோது சவுல் அவனை அடையாளம் கண்டு கொண்டான். அவன் தன்னுடைய தீர்க்கதரிசியின் உடையை அணிந்தவனாய் அங்கே நின்றுக் கொண்டிருந்தார். அந்த சூனியக்காரி பயந்து, தரையில் விழுந்து, “தேவர்கள் மேலே ஏறி வருகிறதை நான் காண்கிறேன்”, என்று கூறினாள். அவன் (சாமுவேல்) தன்மேல் தீர்க்கதரிசி உடையை அணிந்தவனாய் மட்டும் இல்லாமல், அவன் இன்னுமாக தீர்க்கதரிசியாகவும் இருந்தான். சாமுவேல் அவனிடத்தில், “நீ கர்த்தருக்கு சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?”, “நாளைக்கு நீ என்னோடே கூட இருப்பாய்” என்று கூறினான். மேலும் எப்படியாய் அவன் யுத்தத்தில் மரிப்பான் என்றும் அவனுடைய குமாரனும் மரிப்பான் என்று கூறின விதமாகவே சரியாக நிறைவேறினது. அங்கே அவர்கள், அவனை (சாமுவேலை) அடையாளம் கண்டு கொண்டார்கள். சகோதரன் பிரான்ஹாம், “அதைக் குறித்து எனக்கு அவ்வளவு நிச்சயமில்லை என்று நீங்கள் கூறலாம்”. அப்படியானால் இயேசு மறுரூபமலையில் இருந்தபோது அவரோடு கூட மோசேவும், எலியாவும் நிற்பதை பேதுரு, யாக்கோபு, யோவான் அங்கே நின்றபடி அவர்களை பார்த்தனர். அது சரிதான். ஆமாம், நாம் இங்கிருந்து போன பிறகு நாம் வேறுவிதமாய் இருப்போம். நாம் ஒரு நபராக மற்றும் அவ்விதமான ஏதோ காரியமாய் இருக்கப் போகிறோம்.தன்னுடைய மக்களுக்கு புதிய சரீரத்தை வைத்திருக்கிற தேவனை, அவருடைய கிருபையின் மூலம் அறிந்திருக்கிற நாம் இன்றைக்கு எப்பேற்பட்ட மக்களாய் இருக்கவேண்டும். 22இங்கு இருக்கின்ற இந்த சிறிய, வயதான, பெலவீனமான நம்முடைய கூடாரத்தின் தாழ்வு நிலையை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். அல்லது இது என்னதான்? இது வெறுமனெ கொஞ்சம் ஊட்டச் சத்துகளும், ஆற்றல்களும் இன்னும் அது போன்றவைகள் சேர்க்கப்பட்டதும், ஆத்துமா இருக்கக்கூடிய ஒரு சிறிய இடமாக இது இருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் வருகின்ற மகிமையான நாட்களில் ஒன்றில் அது மாற்றப்படும் (changed), அதனுள் இருக்கும் இதுவும் போய்விடும் ஏனெனில் இது மறுபடியும் அதற்குள் உடனடியாக வரமுடியாது. அதுதாமே படிப்படியாக உள்ளே வரவேண்டியதாய் இருக்கிறது. மரித்து பின் அந்த மாதியான சரீரத்திற்குள் சென்ற பிறகும் கூட அது எவ்விதமாக இருக்கும் என்று நமக்கு தெரியாது, ஏனெனில் முடிவில் (end) நாம் எவ்விதமாக இருப்போம் என்று இன்னுமாக நமக்கு தோன்றவில்லை. ஆனால், அவருக்கு இருக்கும் மகிமையான சரீரத்தைப் போலவே நமக்கும் இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம், ஏனெனில் அவர் இருக்கிற வண்ணமாக நாம் அவரைப் பார்ப்போம். 23இப்பொழுது, நம்மை இரட்சிக்க எவ்வளவு விலையை அது எடுத்து கொண்டது? அதை பற்றி நியாயத் தீர்ப்பின் மூலம் நாம் பேசப் போகிறோம். “மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினது போல” என்ற வார்த்தைக்கு நாம் திருப்புவோம். அவன் கூறினான், “வனாந்திரத்தில்...” எந்த காரணத்திற்காக மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதே காரணத்தினிமித்தம் மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டியிருந்தது. இப்பொழுது, ஒன்றிற்கு மேற்பட்ட நோக்கத்திற்காக (compound purpose) மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினான்; ஏனெனில் அவர்கள் குறை கூறினார்கள் (grumbling), இன்னொன்று அவர்கள் வியாதிப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் தான் அது இஸ்ரவேலர்களுக்கு தெய்வீக சுகமளித்தலை அங்கே கொண்டு வந்தது. எண்ணாகமம் 21-ம் அதிகாரத்திற்கு திருப்பி, அதிலிருக்கும் அருமையான காரியத்தை கண்டுபிடிப்போமா? எண்ணாகமம் 21, சரியாக அதின் மேல்தான் என்னுடைய குறிப்புச் சீட்டும் இருந்தது. இஸ்ரவேல் பிள்ளைகளின் யாத்திரையின் துவக்கம், இன்றைக்கு இருக்கும் சபையானது மகிமையின் தேசத்துக்கு கடந்து போகின்றதற்கு எவ்வளவு பரிபூரணமான மாதிரியாய் இருக்கிறது என்பதை இங்கு சற்று நாம் கவனித்துப் பார்ப்போம். நாமும் அப்படியாய் யாத்திரையில் பயணிக்கும் போது ஒவ்வொரு நாளும் சற்று முன்னேறிப் போகிறோம் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? ஒவ்வொரு இரவும், புதிய இடத்தில் கூடாரம் அமைத்து நெருப்பை பற்ற வைக்கும் போது (campfire), நேற்று இருந்ததைவிட (இன்று) சற்று நெருங்கி வந்திருக்கிறேன் என்று நான் உணர்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? ஒவ்வொரு இரவும் கூடாரம் அமைத்து நெருப்பை பற்ற வைத்துதொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டிருக்கிறோம். 24இஸ்ரவேல் மக்கள் தொடர்ந்து யாத்திரை பண்ணும் மட்டும், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து அவர்கள் முனுமுனுக்கவும் (murmur), குறைகூறவும் செய்தார்கள் (complainers). ஏனெனில் அவர்கள் தேவனை அவருடைய மகத்தான வல்லமையின் ரூபத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. கூடாரத்தில் உள்ள நீங்களும், இன்னும் புதியவர்களும், மற்றவர்களும் மன்னிப்பீர்களானால், நான் இங்கே கொஞ்சம் புகழ்ச்சியாக (brag) பேச விரும்புகிறேன். நீங்கள் எங்களில் ஒருவராயிருக்கிறீர்கள்; இங்கே நம்மிடையே எந்த ஒரு பாகுபாடும் இல்லை; கிறிஸ்துவில் நாமெல்லாரும் ஒன்றாயிருக்கிறோம். நாம் அவ்வளவாக ஒருவரையொருவர் நேசிக்கிறோம். இப்பொழுது, இயற்கைக்கு மேம்பட்ட முழு சுவிசேஷத்தோடு நிற்பதற்காக நாம் எப்படியாய் பிரயாசப்படுகிறோம். தேவன், அவர் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்கிறேன் என்றும், அவர் சிருஷ்டிகர்த்தர் என்றும் கூறுவாரானால்; அதை நாம் ஏற்றுக்கொள்வோம்; அதை நாம் விசுவாசிப்போம். தேவன் ஒரு காரியத்தை செய்யும்போது அதற்கு நாம் “ஆம், ஐயா” என்று சொல்வோம். “சரி, சரியாக அது (வேதவசனம்) அந்த அர்த்தத்தில் இப்பொழுது இல்லை” என்று கூறி, வேதவசனங்களை மாற்றி அமைப்பதையோ அல்லது வியாக்கியானம் கொடுப்பதையோ நாங்கள் விசுவாசிப்பதில்லை. அது எதை கூறுகிறதோ அதற்கு சரியாக அது தான் அர்த்தம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அதோடு கூட நாங்கள் ஒருபோதும் (fool) முட்டாள்தனமாக விளையாட மாட்டோம்; “அதுதான் காரியம்”, என்று சொல்வோம். சரி, என்னுடைய விசுவாசம் அந்த அளவுக்கு வரவில்லையென்றால், அது என்னுடைய தவறு. அது தேவனுடைய தவறு ஆகாது. 25இப்பொழுது, இஸ்ரவேல் புத்திரர்கள் யாத்திரையில், அவர்கள் வெகுதூரம் யாத்திரை செய்ய வேண்டும் என்று இல்லை. அவர்கள் தொடர்ந்து சென்று இருப்பார்களானால், நிச்சயமாக அதை அவர்கள் ஒரு வாரத்திற்குள் நடந்து சென்று இருக்கலாம். ஆனால் அவர்கள் வழியில் குறுக்கிட்டது எதுவென்றால், அது அவர்களுடைய முறுமுறுப்பு, குறை கூறுதலுமே. எனவே தேவன் அவர்களோடு கூட இடைபட நேரிட்டது. பின்னர், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தவுடன் பன்னிரெண்டு கோத்திரத்திலிருந்து ஒவ்வொரு நபரை தேர்தெடுத்தார்கள். அவர்கள் இருவரில் யோசுவாவும், காலேபும் வேவு பார்த்து திரும்பிவந்து, “நம்மால் அதை சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்றார்கள். ஆனால் அவர்களில் பத்து பேர் திரும்பிவந்து, “அது கூடாத காரியம்”. “அதை நம்மால் சுதந்தரித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அங்குள்ளவர்கள் பலவான்களும், பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது, நாங்கள் அவர்கள் பார்வைக்கு வெட்டுக் கிளிகளைப்போல் இருந்தோம், எனவே அது நமக்கு மிஞ்சின காரியமாய் இருக்கிறது” என்றார்கள். அப்பொழுது அவர்கள் “காதேஸ் பர்னேயா” என்னுமிடத்தில் வந்தார்கள். காதேஸ்பர்னேயா ஒருவிசை உலகத்தினுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனமாக அது இருந்தது. அங்கே ஒரு பெரிய ஊற்றும் அதிலிருந்து அநேக சிறிய ஊற்றுகளும் புறப்பட்டு சென்றன. அது தாமே மறுபடியும் பெரிய ஊற்றாகிய கிறிஸ்துவுக்கும், நியாயத்தீர்ப்பின் சிங்காசனமான கிறிஸ்துவிலிருந்துவரும் சபையாகிய சிறிய ஊற்றுக்கும் ஒரு பரிபூரணமான மாதிரியாய் (type) இருக்கிறது. நியாயத் தீர்ப்புதேவனுடைய சபையிலிருந்து துவங்குகிறது. இங்கு தான் நாம் நியாயத்தீர்க்கப்படுகிறோம். நாம் தவறானவர்களும், தவறான காரியத்தை செய்கிறவர்களும், தவறான முறையில் ஜீவிக்கிறவர்களும், தவறான ஐக்கியத்தை வைக்கிறவர்களும் இன்னும் அநேக காரியங்களை நாம் செய்கிறவர்களுமாய் இருப்பதை நாம் பார்த்தும், தேவனிடத்தில் சென்று, “தேவனே, என்னை மன்னியும் நான் தவறானவன். நீர் சரியானவர் நான் தவறானவன்; நீர் என்னை மன்னித்து, அடுத்த முறை நான் சரியானபடி ஜீவிக்க எனக்கு உதவி செய்யும்” என்று சொல்வதற்கு அவ்வளவு பெரிதானவர்களாய் இல்லாததது எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது. நாம் தாமே அந்த அளவிற்கு உத்தமமாய் இருப்போமானால், ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதை நாம் கேட்டு, “ஓ, சரி, அப்படிப்பட்ட பிரசங்கத்தை நான் விசுவாசிக்கவே மாட்டேன்”, என்று கூறுகிறோம். 26இப்பொழுது, நான் தவறாக சொல்லவில்லை. ஆனால் நான் மலைக்கு செல்வதற்கு முன் கடைசியாக இங்கே இருந்தபோது, “மன்னிக்கப்படாத பாவம்” என்பதின் பேரில் பிரசங்கித்தேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரி தானே? ஒருவன் நன்மை செய்ய அறிந்திருந்தும், அதை செய்யாமற்போனால் அது அவனுக்கு பாவமாக என்னப்படும். சத்தியத்தின் அறிவை அடைந்த பின்னும் நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிப்போமானால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லாமற்போகும் எபிரெயர்:10. சத்தியத்தை அறிகிற அறிவை அடைந்த பின்னும், நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிந்தும், பின்னர் அதை செய்யாமல் போவோமானால், அதை செய்யுமட்டும் நம்மால் தேவனோடு தொடர்ந்து செல்லமுடியாது. பாருங்கள்‚ இம்மாதிரியான ஜீவியம் ஜீவிப்பதை விட்டுவிடவும் (stop), உலகத்துக்காக ஜீவிப்பதையும், கிறிஸ்தவனாக இல்லாதபோது கிறிஸ்தவன் என்று கூறுவதை விட்டுவிடும் படியாக(quit), தேவன் நமக்கு இப்பொழுது ஏதோ காரியத்தை அளித்திருக்கிறார். நாம் தாமே அதே காரியத்தில்தொடர்ந்து நிலைத்திருப்போமானால், நம்மால் தேவனோடு தொடர்ந்து செல்ல முடியாது. நம்முடைய நிலையானது நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, எனவே அந்த காரியத்தை நாம் சரி செய்யும் வரைக்கும் அந்த இடத்திலேயே நாம் நிற்க வேண்டும், அதன் பின்னரே தேவனோடு தொடர்ந்து செல்லவேண்டும். அப்பொழுது தான் நாம் திரும்பவும் கிருபைக்குள்ளாக வருகிறோம். 27இப்பொழுது, இஸ்ரவேல் காதேஸ் பர்னேயா வரை வந்திருந்தார்கள், இங்கே தான் அவர்களும் வேவு பார்த்து திரும்பிவந்தார்கள். யோசுவா, காலேப் இவர்கள் நிச்சயமாகவே முழுவதும் உற்சாகத்துடன் காணப்பட்டார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு ஜெபக்கூட்டம் இருந்திருக்கும், ஏதோ ஒரு விதமான அசலான எழுப்புதல் அவர்களுக்கிடையே இருந்திருக்கும். அவர்கள் திரும்பி வந்ததும், “ஆம், அதை நம்மால் சுதந்தரித்துக்கொள்ள முடியும்”, என்றார்கள். ஆனால் மற்ற பத்து பேரோ, “ஓ, இல்லை, நம்மால் அதை சுதந்தரித்துக் கொள்ள முடியாது, அது நம்முடைய திராணிக்கு மேலானதாக இருக்கிறது”. பாருங்கள்‚ விசுவாசம் என்பதே இல்லை. கவனியுங்கள், கிறிஸ்தவர்களே, ஒவ்வொரு காரியமும் விசுவாசத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. விசுவாசத்திற்கு ஒரு ஆதாரம் இல்லாத பட்சத்தில் அது சரியானதாக இருக்காது. “சரி, இதைத் தான் என் விசுவாசமாக நான் நம்புகிறேன்...” என்று சொல்லும்போது, நீங்கள் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது. தேவனுடைய விசுவாசத்துக்கு என்னுடைய விசுவாசம் முரண்பட்டிருக்குமானால் (contrary) அது ஒரு நன்மையும் தராது. ஆனால் என்னுடைய விசுவாசம் அவருடையதோடு ஒத்துப்போகுமானால், அப்பொழுது நான் திடமான அஸ்திபாரத்தை பெற்றிருப்பேன். என்னதான் காரியம் நிகழ்ந்தாலும், எப்படியாயினும் நாம் அங்கு செல்வோம். ஏனெனில் தேவன் அவ்விதமாக கூறியிருக்கிறார். இப்பொழுது, அவ்விதமான விசுவாசத்தைத் தான் காலேபும், யோசுவாவும் பெற்றிருந்தார்கள். 28இப்பொழுது, மோசே புறப்படுவதற்கு முன், தேவன் அவனிடத்தில்; பிள்ளைகள் ஒன்றும் பிறவாததற்கு முன்னமே, அவர் ஆபிரகாமிடத்தில் அவனும் அவன் சந்ததியும் அந்நிய தேசத்தில் பரதேசிகளாயிருப்பார்கள், ஆனாலும் அவர் அவர்களுக்கு பாலஸ்தீனத்தை கொடுப்பேன் என்று கூறினார். அதை அவர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார். அதன் பின், அவர் மோசேயை சந்தித்துஅந்த தேசத்தை ஏற்கனவே உனக்கு கொடுத்துவிட்டேன், “வெறுமனே சென்று அதை எடுத்துக் கொள்” என்று கூறி அந்த வாக்குத்தத்தை உறுதிப்படுத்தினார். ஓ, இங்கே இதை நான் நேசிக்கிறேன், யோசுவா, அவன் எதைப் பார்த்தானோ அதின் மேல் விசுவாசத்தை வைக்காமல், ஆனால் தேவன் என்ன கூறினாரோ அதின் மேல் தன் விசுவாசத்தை ஆதாரப்படுத்தினான். இராட்சதர்கள் எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், எத்தனை மதிற் சுவர்கள் அங்கே சுற்றி இருந்தாலும், எவ்வளவு ஆயுதங்கள் அவர்களிடத்தில் இருந்தாலும், யோசுவா தேவனுடைய வார்த்தையை மட்டுமே நோக்கிப் பார்த்தான். அதைத்தான் இன்றைக்கு நாம் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். “ஓ, சகோதரன் பிரான்ஹாம், எனக்கு அதிகமான ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது” என்று நீங்கள் கூறலாம். எனவே எனக்கு இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்கு இருக்குமானால்... கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக, ஒரு சிறிய சீமாட்டி ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் சென்றாள். அந்த சிறிய மருத்துவரோ சபித்துக் கொண்டும், மேலும் கீழும் குதித்துக் கொண்டும் இப்படியாக தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். அந்த சீமாட்டி, “மருத்துவரே, உங்களுடைய நிலையில் நான் இருந்தால் அவ்விதமாக நடந்துக் கொள்ள மாட்டேன்”, என்று கூறினாள். அதற்கு அவர், “எனக்கு இருக்கும் கவலைகள் (worries) உனக்கு இருந்தால், நீயும் அப்படித்தான் செய்திருப்பாய்”, என்றார். அவள், “உங்களுக்கு எவ்வளவு கவலைகள் இருக்கின்றதோ அவ்வளவும் எனக்கு இருக்கு, இருப்பினும் நான் அவ்விதமாக நடந்து கொள்ள மாட்டேன்”, என்றாள். எனவே சரியாக அவர்கள் அந்த மருத்துவரை சரியான நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அது சரிதான். அது முதற்கொண்டு அந்த சிறிய சீமாட்டிக்கு அவர் மரியாதை கொடுத்தார். அது தான் காரியம்; ஏற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வார்த்தை அதை நடப்பிக்கும். பாருங்கள்‚ உங்களுடைய கவலைகள் என்னவாயிருந்தாலும், உங்களை கவர்ந்து இழுக்கக்கூடியது என்னவாயிருந்தாலும் (temptations) தேவனுடைய வார்த்தையின் மேல் நில்லுங்கள். எல்லாம், ஒவ்வொரு காரியமும் தவறாக நடப்பதுபோல காணப்பட்டாலும், தேவனுடைய வார்த்தையின் மேல் நில்லுங்கள். அவர் அதை கூறியிருக்கிறார். 29அவர்கள் கடக்க வேண்டிய இடத்திற்கு வந்தபோது, தேவன் அந்த இடத்தை கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்றும், எதிர்ப்புகள் எது வந்தாலும் அது அவர்களுக்கே சொந்தமானது என்பதை யோசுவா அறிந்திருந்தான். அதுதாமே இன்றைக்கு இருக்கிற கிறிஸ்துவின் சரீரமாகிய; அசலான, உத்தமமான அங்கத்தினர்களைக் கொண்ட சபைக்கு மாதிரியாய் (type) இருக்கிறது. நம்மிடத்தில் சபைக்கு செல்லும் மக்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அந்த சபையில் அநேகர் - எல்லோருமே நான் யூகிப்பது, நான் நம்புவது... அந்த சபையின் குறிப்பிட்ட கூட்டத்தில், தங்கள் முழு இருதயத்தோடு உத்தமமாய் விசுவாசிக்கிற அங்கத்தினர்கள் அந்த சபையில் உண்டு. அது அவ்விதமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களை பிரசங்க பீடத்தில் ஏவுதலின் கீழாக இருக்கும்போது கண்டுபிடித்து, அவர்கள் உண்மையிலேயே அசலானவர்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் முழு சுவிசேஷத்தையும், (full Gospel) இன்னும் அது போன்ற காரியத்தை புரிந்துக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனாலும் தங்கள் இருதயத்தில் இன்னும் அவர்கள் உத்தமமாய் இருக்கிறார்கள். அவர்கள் எதை விசுவாசிக்கிறார்களோ, அதை அவர்கள் உத்தமமாய் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறார்கள். விசுவாசத்தினால் வராத ஒவ்வொன்றும் பாவமே. அவிசுவாசம் (unbelief) அது முற்றிலும் பாவம். விசுவாசத்தினால் வராத ஒவ்வொன்றும் தேவனுடையது அல்ல. நீங்கள் கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள ஒரே வழி என்னவெனில் முதலாவதாக தேவன் அதைக் குறித்து என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும், அதன் பின் அவருடைய வார்த்தையை நம்பவேண்டும். அது உண்மை. அந்த ஒரு வழியில் மட்டுமே நீங்கள் அதைச் செய்யமுடியும். 30எனவே, யோசுவாவும் காலேபும் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதை அறிந்ததினால், அவர்கள் திரும்பி வந்து, “நம்மால் அதை சுதந்தரித்துக் கொள்ள முடியும்” என்று சொல்வதற்கு பயப்படவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை எதைப் பார்த்தார்களோ அதன்மேல் ஆதாரப்படுத்தாமல், எதை விசுவாசித்தார்களோ அதன்மேல் ஆதாரப்படுத்தினார்கள். இப்பொழுது இன்றைக்கு இந்த கூடாரத்தில் உள்ள நாம் அமெரிக்க பிரஜைகள் என்ற முறையில் அதின் மேல் விசுவாசத்தை வைக்கலாம். அதைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் என்ற முறையில், எந்த மருத்துவர் என்ன கூறியிருந்தாலும், எந்த விஞ்ஞானி என்ன கூறியிருந்தாலும், எப்படிப்பட்ட நிரூபித்தல் (Proof) இருந்தாலும், தேவன் என்ன கூறியிருக்கிறாரோ அதின்மேல் நம்முடைய விசுவாசத்தை வைக்கலாம். 31இங்கே சில நாட்களுக்கு முன், இரண்டு வாரங்களுக்கு முன்னர், நான் வானொலி ஒளிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தேன், இல்லை, அங்கே ஓரிகனில் (Oregon) அல்லது இதாஹோவில் (Idaho) செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தேன், அதில், யாரோ ஒரு விஞ்ஞானியை குறித்து புகழ்ச்சியாக கூறியிருந்தார்கள், ஏனெனில் மிருகத்தினுடைய ஜீவனும் (animal life) தாவரத்தினுடைய ஜீவனும் (Palant life) ஒன்று தான் என்று நிரூபிக்கக் கூடிய நிலையில் அவர் இருந்தார். சரி, அப்படியானால் தாவர ஜீவனிலிருந்து மிருகம் எப்படி தோன்றினது? மேலும் தாவரம், வேறொரு வார்த்தையில் சொல்வோமானால் மரம், மீன் இவையெல்லாம் ஒரே ஜீவனாகிவிடும். பாருங்கள்‚ சரி, என் மனநிலை புரிந்துக் கொள்வதைக் காட்டிலும் அது சற்று அதிகமானதாக இருக்கலாம். தேவன் மரத்தை உண்டாக்கினார், அவர் மீனை உண்டாக்கினார் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்‚ எனவே அது வரைக்கும் தான் என்னால் போகமுடியும். நான் விசுவாசிப்பது என்னவென்றால், அதற்கு புறம்பாக இருக்கும் எந்த காரியத்தையும், அதை நான் விசுவாசிப்பது கிடையாது, அவ்வளவுதான். அது தாமே தேவனுடைய வார்த்தையை சார்ந்ததாக இருக்கவேண்டும். பனை மரத்தையும் (Plam) அவர் தான் உண்டாக்கினார். கர்வாலி (Oak) மரத்தையும் அவர்தான் உண்டாக்கினார். அவை இரண்டும் ஒரே மரவகை அல்ல. அப்படியிருக்குமானால் கர்வாலி மரம் தேங்காயையும், பனையையும் மற்றவைகளையும் விளையச் செய்திருக்கும். பாருங்கள், அது தாமே அதற்குள்ளாக இருக்கும் ஜீவனை (life) பொருத்து இருக்கிறது. எனவே, நான் அவரை அவருடைய வார்த்தையில் ஏற்றுக் கொள்கிறேன், அது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் அதை நான் அவ்விதமாகவே விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? 32இப்பொழுது, இந்த காலையில் மக்கள் ஜெபம் செய்துக் கொள்ள வரும்போது, நம்முடைய எண்ணங்கள் ஒன்றின் மீது ஆதாரப்படும்படி செய்ய முடியும். எப்படியெனில்: “தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்பதின் மீது நம்முடைய எண்ணங்கள் ஆதாரப்படும்படி செய்ய முடியும். நீங்கள் இந்த காலையில் இங்கு இருப்பீர்களானால், இவ்விதமாக நீங்கள் கூறலாம், “சரி, சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய ஜீவியம் மேலும் கீழுமாக இருக்கிறது. நான் எப்பொழுதும் கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவிக்கவே பிரயாசப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னால் அதில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை”. சரி, இந்த காலையில் இங்குள்ள என்னுடைய சகோதர, சகோதரிகள் மீது என் விசுவாசத்தை வைக்க முடியும். நீங்கள் மட்டும் அந்த முழுமையான அர்பணிப்பை (Consecrate) இப்பொழுது செய்வீர்களானால்... நீங்கள் இந்த பலிபீடத்தண்டை வரும்வரைக்கும் காத்திருக்க வேண்டாம். நீங்கள் இங்கே வந்து, “நான் அதை இப்பொழுது ஏற்றுக்கொண்டேன்”, என்று கூறலாம், ஆனால் இப்பொழுதே நீங்கள் எங்கிருந்தாலும் இப்படிச் சொல்லுங்கள், “தேவனே, நான் ஒரு பாவியும், பின்வாங்கிப் போனவனும், எப்படிப்பட்டவனாயிருந்தாலும் என் மீது கிருபையாயிரும். நான் இப்பொழுது என் நம்பிக்கையை வேறொன்றின் மீதும் வைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின் மீது வைக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன்”. சகோதரனே, அதன்பின் ஏதோ காரியம் நிகழும், ஏனெனில் தேவன் உங்களை ஒருபோதும் புறம்பே தள்ளிவிடமாட்டார் எ ன்ற அசலான அஸ்திபாரத்தை பெற்றிருக்கிறீர்கள். கவர்ந்திழுக்கக் கூடிய சோதனைகள் (Tempations) வரும்; நீங்கள் அதை பொறுத்துக் கொள்ள கூடிய கிருபையை அவர் உங்களுக்கு கொடுக்காமல் வேறு சோதனைகளை உங்களுக்கு கொடுக்கமாட்டார். ஒவ்வொரு யுத்தகளத்திலும் உங்களிடத்தில், சரியாக அங்கே வந்து உங்களை ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். எனவே அப்படியானால், அதன் மீது தான் உங்களுடைய நம்பிக்கையும் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். “சரி, சகோதரன் பில், எனக்கு நிறைய சோதனைகள் உண்டு” என்று சொல்லக்கூடிய நிலைமைக்கு நீங்கள் வந்திருக்கலாம். ஒரு சோதனைக் கூட இல்லாத கிறிஸ்தவனை எனக்கு சொல்லுங்கள். நாம் சுற்றுலா செல்வதற்காக (Picnic) இங்கே வரவில்லை; நாம் யுத்தகளத்திற்கு வந்திருக்கிறோம். நாம் இங்கே எதிராளியினிடத்தில் யுத்தம் செய்ய வந்திருக்கிறோம். அப்படியானால் நிச்சயமாகவே நாம் நம்முடைய போராயுதங்களை மற்றவர்கள் காண்பதற்காக தரித்துக் கொள்ளவில்லை. நீங்கள் மற்றவர் பார்க்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்களாயிருப்பீர்களானால், அப்படியானால், நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள் என்று நான் அஞ்சுகிறேன். 33சில சமயம் கிறிஸ்தவர்கள் கீழ்தனமாக பார்க்கப்படலாம் அல்லது ஏளனம் செய்யப்படலாம். ஆனால் நாமோ ஒரு யுத்த வீரனாக வந்திருக்கிறோம் (ஆமென்), இரத்தம் தெளிக்கப்பட்டவர்களாக வந்திருக்கிறோம். அந்த கரடுமுரடான சிலுவை நமக்கு முன்பாக போய்க் கொண்டிருக்கிறது, விடிவெள்ளி நட்சத்திரம் நம்முடைய பாதையை பிரகாசிக்க செய்துக் கொண்டிருக்கிறது, ஏன், நாம் நம்முடைய பாதையில் ஏதோ ஓரிடத்தில் சென்றுகொண்டிருக்கிறோம். உலகம் என்ன சொல்கிறதோ அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஆனால் தேவன் என்ன சொல்கிறார் அதுதான் முக்கியம். இந்த இடம் நமக்கு சொந்தமானது. ஏனெனில் தேவன் அவ்விதமாக கூறியிருக்கிறார். நாம் நம்முடைய பாதையில் இருக்கிறோம். நாம் இங்கே யுத்தகளத்தில் அடித்து வீழ்த்தப்படுவோம் என்றால்... இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போகுமானால், நமக்காக ஏற்கனவே அங்கே ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. எதைக் குறித்தும் நாம் பயப்பட தேவையில்லை. ஆம் ஐயா, ஒவ்வொன்றும் நமக்கு சொந்தமானது, ஏனெனில் அவையெல்லாவற்றையும் கிறிஸ்து நமக்கு அவர் (Him) மூலமாக மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவர் நம்மை நேசித்தார், தேவன் நம்மை அவரிடத்தில் இழுக்காத பட்சத்தில் நாம் அவரண்டை வந்திருக்க முடியாது. அவர், “என்னுடைய பிதா முதலாவது ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற எல்லோருக்கும் நான் நித்திய ஜீவன் அளித்து, கடைசி நாளில் அவனை உயிரோடே எழுப்புவேன்”. அப்படியானால் நமக்கு என்ன கவலை உண்டு? நாம் எதைக் குறித்தும் கவலைப்பட தேவையில்லை, எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. “யார் ஜனாதிபதி ஆகப்போகிறார்?” நாம் புதிய ஜனாதிபதியைபெற்றுக் கொள்ளப் போகிறோம் என்று சொல்லலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு தெரிந்த ஒரே காரியம், தேவன் என்னிடத்தில் பேசி, என்னைக் கொண்டு செல்லப் போகிறார் என்று கூறியிருக்கிறார், எனவே நான் அவருடைய கரத்தைப் பற்றிக் கொண்டு, அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகவே நாம் இப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு போகும் பாதையில் இருக்கிறோம். நாம் காதேஸ் பர்னேயா வந்ததும், நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து தொடர்ந்து முன் செல்வோம். அது சரிதான். ஓ, மகிமையான பாகம் என்னவெனில், நதிக்கு அப்பால் என்றென்றைக்கும் இனிமையானது என்று நாம் - அவர்கள் அழைக்கின்ற தேசம் ஒன்று உள்ளதை நாம் அறிந்திருப்பதால், எப்பொழுதாவது ஒருமுறை, அவர் நமக்கு அதற்கு ஆதாரமாக (evidence) ஒரு பெரிய திராட்சை குலையைகொடுக்கிறார். அது சரிதானே? எனவே வாழ்வோ சாவோ, அது என்ன வித்தியாசத்தை செய்யப் போகிறது. அதை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டேயிருப்போம். 34இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒரு அரைகுறை ஜீவியத்தை ஜீவிப்போமேயானால், அது ஒரு நன்மையும் தராது. இப்பொழுது சரியாக அந்த காரியத்தை இறக்கிவைத்து இவ்விதமாக சொல்வோம், “தேவனே, சரியாக இந்த காலையில் நான் இங்கே வந்து, என்னுடைய விசுவாசத்தை உம்முடைய வார்த்தையின் மீதாக வைக்கிறேன். என் ஜீவியத்தில் நான் சத்தமிடவே இல்லையென்றாலும் நான் கவலைப்படமாட்டேன். என் ஜீவியத்தில் நான் அழவே இல்லையென்றாலும் நான் கவலைப்படமாட்டேன். எவ்விதமான நிரூபிக்கக்கூடிய செயலும் (demonstration) என்னிடத்தில் இல்லையென்றாலும் நான் கவலைப்படமாட்டேன்; நான் என் விசுவாசத்தை உம்முடைய வார்த்தையின் மீதாக வைக்கிறேன்; நான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு போகும் வழியில் இருக்கிறேன். ஏனெனில் உலகம் என்னிடத்தில் கூறியிருக்கிறது அல்லது வேறு யாரோ என்னிடத்தில் கூறினது, நான் இரட்சிக்கப்பட்டவுடன் விநோதமான (funny) உணர்வை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்லது அது போன்று ஒரு காரியத்தை...” இப்பொழுது, நான் அதற்கு விரோதமாக தீமையாக பேசவில்லை. அதெல்லாம் சரிதான், ஆனால் அது காரியம் இல்லை. என் விசுவாசம் இயேசுவின் இரத்தம், நீதி அல்லாமல் வேறொன்றின் மீதும் கட்டப்படவில்லை. ...என் ஆத்துமாவை சுற்றிலும் உள்ள யாவும் கைவிடுமானால், அப்பொழுது அவரே என் நம்பிக்கையும் புகலிடமாவார். இந்தகாலையில் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் தேவனால் கொடுக்கப்பட்ட வழியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடைய வார்த்தை அவ்விதமாக கூறியிருக்கிறது; அதை அவ்விதமாகவே நான் எடுத்துக் கொண்டேன், அது காரியத்தை வாய்க்கப்பண்ணும். 35பிசாசு என்னிடத்தில் வந்து, “சரி, நானும் கூட ஒரு சமயம் ஒருவித விநோதமான (Funny) உணர்வை பெற்றுக் கொண்டேன்”, என்றான். அது என்னை இரட்சிக்கப்பட்டவனாக ஆக்குகின்றதா? எனக்கு தெரியாது, சகோதரனே, ஆனால் நீ இந்த வார்த்தையை இங்கே சந்திக்கவேண்டும். இயேசு, “என் வார்த்தைகளை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு”, என்றார். ஓ, என்னே, அந்த சத்தத்தை நான் கேட்கிறேன்... நான், அவர் கூறினதை கேட்க, அங்கே இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், நீங்களும் விரும்பவில்லையா? “என் வார்த்தைகளைகேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. என்னே‚ அது தாமே எல்லா மெத்தொடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகளையும், பிரஸ்பிடேரியன்களையும், பெந்தெகொஸ்துகளையும் மற்றும் எல்லாவற்றையும் அடித்து கீழே தள்ளாமற் போகுமானால் (Knockout) வேறு எது அதை செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. அது தாமே எல்லாவற்றையும் கீழே விழச் செய்து அதற்கு பதிலாக “விசுவாசிக்கிற அவன்” என்ற காரியத்தை அங்கே கொண்டு வருகிறது. அது சரிதானே? அது சரிதான். “என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. (அவன் எப்படிபட்டவனாக இருந்தாலும் இருக்கட்டும். அதுசரிதான்). ஓ, என்னே, அந்த கப்பல் இப்படியும் அப்படியும் ஊசலாடட்டும், மரத்தினால் செய்யப்பட்ட அதின் பாகங்கள் கீறிச் என்று ஒலியை எழுப்பட்டும்; எப்படியோ இந்நாட்களில் ஒன்றில் அது சேதமடைய போகப் போகிறதுதான்; ஆனால் அக்கரையை சேரும்வரைக்கும் அது சேதமடையப் போவதில்லை. அது அந்த அளவுக்கு அவ்வளவு உண்மையாயிருக்கிறது. அவ்வளவு நிச்சயமாக, அவள் அங்கே போய் சேருவாள் (சாதிப்பாள்), ஏனெனில் தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை நான் நினைக்கும்போது, அது என் எல்லா பயத்தையும் எடுத்துப் போடுகிறது; எல்லா குழப்பத்தையும் எடுத்துப் போடுகிறது; எல்லா கசப்புணர்ச்சியையும் எடுத்துப் போடுகிறது. அது உன்னை தவறாக நடத்தியவனை மறுபடியும் சகோதரனாக பார்க்கச் செய்யும். எனவே அவனோடு கைகோர்த்து செல். அது சரிதான். “இதோ அவள் தவறிழைத்துவிட்டாள், ஏன், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறது? நானும் கூட தவறிழைத்திருக்கிறேன். அவர்கள் தோள் மீது என்னுடைய கரத்தை போட்டு, ”வாருங்கள், சகோதரனே, இன்னும் சற்று முன்பாக இப்பொழுது முன்னேறிப் போகலாம், இறுக கட்டலாம் அந்த பழைய... 36பவுல், இங்கே நடுவில் உள்ள வார்பூட்டை (Buckler) குறித்து பேசுகிறார். (உங்களுக்கு தெரியுமா?) அதை நான் விரும்புகிறேன். வார்பூட்டு, அது முக்கியமான பகுதி என்பதை உணர்ந்துக் கொண்டீர்களா? வேதத்தில் அதைக் குறித்து அதிகமாக சொல்லப்படவில்லை, ஆனால் அது முக்கியமான பாகமாக இருக்கிறது. வார்பூட்டு, அதுதான் சர்வாயுதவர்க்கத்தை ஒன்று சேர்த்து கட்டி வைத்திருக்கும் பட்டையை இறுக பிடித்து வைத்திருக்கும். அது சரிதானே? எனவே நான் தலைச்சீரா (Helmet), மார்கவசம் (Breast plate) இன்னும் எல்லா வெவ்வேறு விதமானவற்றையும் வைத்திருக்கிறேன், ஆனால் அதையெல்லாம் பூட்டி, இறுக கட்டி வைத்திருக்கும் அந்த வார்பூட்டை மறக்க வேண்டாம். எனவே வார்பூட்டு போட்டு, நன்றாக இறுக பிடித்துக் கொள்ளும்படி செய்து மறுபடியும் தொடர்ந்து (உங்களுக்கு தெரியும்?) செல்ல ஆரம்பியுங்கள். 37யோசுவா திரும்பி வந்து, “நிச்சயமாக நம்மால் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம். ஏனெனில் தேவன் அவ்விதமாக கூறியிருக்கிறார். காதேஸ் பர்னேயா, அங்கே தான் அவர்கள் நியாயத் தீர்ப்பை சந்தித்தார்கள். அங்கு தான் தேவன் அவர்களை நியாயந்தீர்த்தார். இப்பொழுது, எதற்காக தேவன் நியாயத்தீர்ப்பு செய்தார். ஏனெனில் அவர்கள் அவிசுவாசித்தார்கள். காதேஸ் பர்னேயா இஸ்ரவேல் நியாயந்தீர்க்கப்பட்ட இடமாக இருந்தது. ஏனெனில் நம்புவதற்கான ஆதாரம் இருந்தும் அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்தார்கள். இப்பொழுது, இதோ இவர்கள் வனாந்திர பிரயாணத்தில் இருந்தார்கள். அதைப் பற்றி இன்னும் அதிகமாக படிக்கநேரம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன், ஆனால் அதற்கான போதிய நேரமில்லை. ஆனால் வனாந்திர பிரயாணத்தில் அவர்கள் எப்படியாக குறைகூறினார்கள், “இது மாதளஞ்செடி இல்லாத இடம். இங்கே அத்திமரமும், திராட்சைசெடியும் இல்லை”. மேலும், “நீ எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாய், அங்கே எங்களுக்கு நல்ல அருமையான வீடுகள் இருந்தது; இங்கே தண்ணீரும், ஆகாரமும் ஒன்றுமில்லாத இந்த வனாந்திரத்தில் மடிந்து போகும்படி எங்களை கொண்டு வந்தாய். இதோ இப்படிப்பட்ட இடத்திற்குதான் எங்களை கொண்டு வந்திருக்கிறாய்”, என்றார்கள். எல்லா அறிகுறிகளும் அவர்களுக்கு எதிராய் இருந்தன. “இதோ சிறிய பழமையான நதி பக்கத்தில் இப்பொழுது எங்களை வழிநடத்தி வந்திருக்கிறாய்; இங்குள்ள இந்த ஊற்றுகளிலும், இந்த பாலைவனச் சோலையிலிருந்து புறப்பட்டு வரும் தண்ணீர் எங்களுக்கு குடிப்பதற்கு கொஞ்சம் மாத்திரம் உள்ளது”. ஓ, என்னே. குறைகூறுபவனும், அவன் வியாதிப்படும்போது அதே விதமாகத் தானே பேசுகிறான்? பின்னர், “இதோ இங்கே நாங்கள் வந்திருக்கிறோம். இங்கே புசிப்பதற்கென்று ஒன்றுமில்லை. இங்கே மாதுளைகளும் இல்லை. இங்கே நாங்கள் பெற்றுக் கொள்ளுகிற ஒரே காரியம், இரவில் பெய்யும் ஒரு சிறிய மன்னாவைமட்டும் தான். இப்பொழுது நீர் எங்களுக்கு சொல்லும், அங்கிருந்து திரும்பி வந்த மக்கள் இப்படியாக கூறுகிறார்கள், எல்லாம் வீணாய் போய்விட்டது…... இதோ நாங்கள் எங்கள் நாட்டை விட்டு இங்கே வந்திருக்கிறோம், நாங்கள் திரும்பி போகவும் முடியாது. இன்னும் ஏன், எங்களுடைய பிள்ளைகளும் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இங்கே வளர்க்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அவர்களுடைய பட்டணங்களை சுற்றிலும் இரதங்களை ஓட்டும் அளவுக்கு, எல்லா பட்டணங்களும் அரணிப்பானைவைகளும், பெரியவைகளுமாயிருக்கிறது. எங்களிடத்திலோ கொஞ்சம் பழைய புல் அரிவாள்களும் (Pruninghooks), பட்டயங்களும், இன்னும் மற்றவைகளை தவிர வேறொன்றும் கரத்தில் இல்லை. அங்கிருக்கும் அந்த எதிராளியின் பெரிய சேனையை பாரும். அவர்கள் அவ்வளவு பெரிய பலவான்கள், ஏனெனில், அவர்களில் ஒருவன் நம்மில் பன்னிரெண்டு பேரை சவுக்கைக் கொண்டு அடித்து வீழ்த்துவான்”. அப்படித்தானே பிசாசும் காரியத்தை பெரிதாக்கி காண்பிக்கிறான்?. 38யோசுவா, அவன் அங்கே நின்றுக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது, காலேபும் தனியாக, அவனுடைய முகம் பிரகாசமடைந்தவனாக. “தேவனுக்கு மகிமை, நம்மால் அதை ஜெயித்துக் கொள்ள முடியும்”, என்று கூறினான். “ஓ, நீ எதை எப்படி ஜெயிக்கப் போகிறாய்”? “நான் எப்படி ஜெயிக்கப் போகிறேன் என்பது அது காரியமல்ல. அதைப் பற்றி கணக்குப் போடுவதும் என் வேலையில்லை, ஆனால் அது எங்களுக்கு சொந்தமானது என்று தேவன் கூறியிருக்கிறார், எனவே அது என்னுடையது. தேவன் அவ்விதமாக கூறியிருக்கிறார்”. அப்படியானால், இந்த காலையில் சுகமடைதல் (Healing) எனக்கு சொந்தமானது. சுகமடைதல் உங்களுக்கு சொந்தமானது. இரட்சிப்பு உங்களுக்கு சொந்தமானது. இரட்சிப்பு எனக்கு சொந்தமானது. “என்னால் சரியான கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவிக்க முடியவில்லை” என்று நீங்கள் கூறலாம், ஆம், உங்களால் ஜீவிக்க முடியும். நம்மால் ஜீவிக்க முடியும் என்று தேவன் கூறியிருக்கிறார். அதை நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? வெளியே (உலகத்தில்) போகாமலும், மக்களோடு சேர்ந்து வாழாமலும், அவர்கள் செய்கிற காரியங்களை செய்யாமலும் எப்படி இப்பொழுது இருக்கிற உலகத்தில் அப்படி ஜீவிக்க முடியும்? நம்மால் அப்படி ஜீவிக்கமுடியும் என்று தேவன் கூறியிருக்கிறார்; அவருடைய கிருபை போதுமானதாயிருக்கிறது. அது போதும், எனவே இறுக்கிகட்டி தொடர்ந்து முன்னே போவோம். காதேஸ்பர்னேயா, நியாயாசனம் (Judgement seat), அங்கேதான் எல்லோரும் நியாயந்தீர்க்கப்பட இருந்தது. அங்கே இருவர் மட்டும் நியாயத்தீர்ப்புக்கு தப்பினார்கள். நியாயத்தீர்ப்புக்கு தப்பினோம் என்று எப்படி அவர்களால் சொல்லமுடிந்தது. “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதின் பேரில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை வைத்தார்கள். அவ்வளவுதான். தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது மட்டும் அல்ல, அதை அவர்கள் நிரூபித்தும் காட்டினார்கள். ஆமென். அவ்விதமாகத்தான் நாமும் செய்ய வேண்டும். ஆமென். 39இப்பொழுது, 21-ம் அதிகாரத்திலிருந்து... இல்லை அது 19-ம் அதிகாரம் என்று நான் விசுவாசிக்கிறேன். அது ஒரு அருமையான அதிகாரம்: முதலாவது, இரத்தத்தினால் மீட்பு என்பதை குறித்து பேசுகிறது. எல்லா நியாயத்தீர்ப்பும் கிருபையினால் மன்னிக்கவும், அது அவர்களுடைய மீட்பை குறித்தாயிருக்கிறது. இரக்கத்தினால் மீட்பு, கிருபையினால் மீட்பு, இரத்தத்தினால் மீட்பு, நியாயத்தீர்ப்பினால் மீட்பு. மேலும் இந்த காலையில் அடுத்த சில நிமிடங்களுக்கு நாம் பார்க்கப்போவது, கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாரானால், முக்கியமான பாகமாகிய நியாயத்தீர்ப்பின் மேல் நம்முடைய கவனத்தை வைக்கப் போகிறோம். இப்பொழுது, முதலாவது இரத்தம் பாவநிவாரணமாக அளிக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்தில் அவர் நியாயத்தீர்ப்பை கொண்டு வருவதற்கு முன், தேவன் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொண்டுவர வேண்டியதாய் இருந்தது, ஏனெனில் ஏற்கனவே அவருடைய வார்த்தையை அவர் பேசியிருக்கிறார், அவருடைய வார்த்தையும், அதைத்தவிர வேறொன்றையும் ஏற்றுக் கொள்ளாது. தேவன், “அதை புசிக்கும் நாளில் நீ சாகவேசாவாய்” என்றார். சாத்தான் அதற்கு எப்படியாக வெள்ளையடித்து (White Wash) ஏவாளிடத்தில் உண்மையை மறைத்தான் என்று கவனித்தீர்களா? அவன், “ஆம், தேவன் கூறினார் தான்... ஆனால் நிச்சயமாக அதை அந்த எண்ணத்தில்அவர் கூறவில்லை”, என்றான். பாருங்கள். இப்பொழுது இன்றைக்கும் பிசாசும் விசுவாசியினிடத்தில் அவ்விதமாகத்தான் கூறுகிறான்: ஓ, நல்லது, இந்த காரியங்களை எல்லாம் நீ செய்ய வேண்டும் என்று இல்லை“. ஏன், சகோதரனே, நீ கிறிஸ்தவனாக இருக்கும் பட்சத்தில் அதை நீ செய்ய விரும்புவாய். விசுவாசிக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தோஷம் என்னவெனில், அவன் தேவனுக்கு பிரியமானபடி ஜீவிக்கிறான் அல்லது தேவனுக்கு பிரியமானதை செய்கிறான் என்பதை அறிந்திருப்பதுதான். ஏன்,நாம் எதிர்நோக்கி இருக்கிறபடியே, தேவனுடைய வருகையை நாம் எதிர்நோக்கி இருப்போமேயானால், ஏன், என்னே, எந்த இடத்திலும் கருத்து வேறுபாடு என்பதே இருக்காது. எல்லோரும் அன்பில் நிலைத்திருப்பார்கள், அங்கே ஒற்றுமை இருக்கும். அது அருமையானதாக இல்லையா? மேலும் உங்களுக்கு தெரியுமா, அவர் இன்றைக்கு கூட வரலாம்? இன்னும் என்ன விடப்பட்டிருக்கிறது என்று எனக்குதெரியாது? அது சரிதான். இதுதாமே அவர் வருவதற்கான நேரமாய் இருக்கிறது. ஆனால்,அவர் வருவதற்கான கடைசி நாள் இதுதான் என்று நாமெல்லாரும் அவ்விதமாக நம்முடைய இருதயத்தில் கொண்டிருப்போமானால், நாம் ஒவ்வொரு நாளையும் இதுவே கடைசிநாள் என்று எண்ணி ஜீவிக்க வேண்டும்: “இது தான் கடைசி நாள்”. எல்லோரும் அன்பில்... 40சில சமயங்களில் நான் என் மனைவியை விட்டு வெளியில் இருப்பேன். நான் என் மனைவியை நேசிக்கிறேன். அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புவேன். நான் அவளுக்கு ஒரு டப்பா நிறைய இனிப்புகள் அல்லது வேறு ஏதாவதை (உங்களுக்கு தெரியும்) வாங்கிக் கொடுப்பேன், அப்படிநான் செய்ய வேண்டும் என்று அவள் விரும்புவதை நான் அறிந்திருக்கிறேன். உங்களுக்கு தெரியும்? அல்லது வேறு ஏதாவது காரியத்தை நான் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினால், அதை செய்வதற்கு நான் விரும்புவேன். இப்பொழுது, சகோதரர்களே, இது பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருக்கலாம். இதை கூறுவதற்கு ஏற்ற இடமாக இது இல்லை, இருப்பினும், நான் அவளுக்கு பாத்திரங்களை (dishes) கழுவிக் கொடுப்பதை விரும்புவேன், ஏனெனில் எல்லா சமயமும் அதை செய்வது அவளுக்கு கடினமாயிருக்கும். எனவே நான் அங்கே சென்று அவளுக்கு பாத்திரங்களை கழுவிக் கொடுப்பேன். அதைக் குறித்து அவள் அதிகமாக பேசமாட்டாள், ஆனால் அவள் அதை பாராட்டுவாள் என்று நான் அறிந்திருக்கிறேன். இங்கே முக்கியப்படுத்தி நான் கூற முயற்சிப்பது என்னவென்றால்? நான் கூற முயற்சிப்பது; யார் என்ன சொன்னாலும்... நான் அதை செய்ய விரும்புகிறேன், ஏன்...அங்கே வெளியே தரைவிரிப்பை தூசி தட்டுவதையும், தரையை சுத்தம் செய்வதையும், இன்னும் பெண்கள் செய்யும் வேலைகளை நான் செய்வதை அக்கம் பக்கத்தினர் கண்டு என்னை பெண்தன்மை (Sissy) கொண்டவன் என்று நினைப்பார்கள் என நான் யூகிக்கிறேன். ஆனால் அதை செய்ய நான் விரும்புகிறேன், ஏனெனில் நான் என் மனைவியை நேசிக்கிறேன். பாருங்கள்! நான் அவளை நேசிக்கிறேன். நான் அவளை நேசிக்கிறேன் என்று அவளுக்கு தெரியப்படுத்தும் எந்த வேலையையும் நான் செய்யக் கூடுமானால், நான் அதை நிச்சயம் செய்ய விரும்புவேன். சரி, ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் அது அவ்விதமாகவே இருக்கிறது. இப்பொழுது இது தாமே உங்கள் இருதயத்தின் ஆழத்தில் பதியட்டும். உங்கள் இருதயத்தை இப்பொழுது பெரிதாக திறந்து கொடுங்கள். நீங்கள் ஒரு விசுவாசியாயும், இயேசுவை நேசிப்பவராயும் இருப்பீர்களானால், அவர் உங்களை அதிகமாக அன்பு கூற செய்யும் ஒவ்வொன்றையும் உங்களால் செய்யக் கூடுமானால், அதை நிச்சயமாகவே நீங்கள் விரும்பி செய்வீர்கள். இங்கே நின்று கொண்டு இந்த மனுஷனுக்கு சாட்சி பகர்வது, அவருக்கு என்மீது அதிகமாக அன்பு கூறச் செய்யுமானால், அதைச் செய்வதை நான் நேசிப்பேன். இந்த பொல்லாத காரியங்களை தவிர்க்க வேண்டுமானால், எவ்வளவுதான் நான் சோதிக்கப்படுவதாக இருந்தாலும், அவைகளை தவிர்ப்பது எனக்கு அவர் மீது அன்பு கூற செய்யுமானால், அவரும் அன்பு கூறுவார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்... அல்லது அதுதாமே அவர் என் மீது இன்னும் கொஞ்சம் அதிகமாக அன்புகூற செய்யும் என்று நான் நினைக்கிறேன். இதை நான் செய்யாமற்போனாலும் அல்லது அதை செய்யாமற் போனாலும், நிச்சயமாக அதை செய்ய நான் விரும்புவேன், நீங்கள் விரும்பவில்லையா? ஏனெனில் நாம் அவரில் அன்பு கூறுகிறோம். 41இப்பொழுது, தேவன் ஆதாமையும், ஏவாளையும் அவ்வளவாக நேசித்தார், எனவே அதற்கு முன்னமே அவர் இரத்தம் சிந்தவேண்டியதாய் இருந்தது... மரணம் நியாயத்தீர்ப்பாயிருந்தது, ஏதோவொன்று அவர்களுக்கு பதிலாக மரிக்க வேண்டியதாய் இருந்தது. அதன் பின்னர்தான், அவர்கள் அவருடைய பிரசன்னத்தில் வந்து நிற்க முடியும். இதோ, அங்கே தான் நியாயத்தீர்ப்பு வந்தது. ஏவாள் முதலாவது பிசாசுக்கு செவிகொடுத்தாள், உண்மையை மறைப்பதற்காக பிசாசும் அந்த வார்த்தைக்கு வெள்ளையடித்தான் (white washed). அவர்கள் வார்த்தையை அவிசுவாசித்தார்கள், அதன் பின்னர் அந்த வார்த்தை தேவனுடைய நியாயத்தீர்ப்பாக மாறினது. இப்பொழுது, இந்த வார்த்தை - தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு நபரையும் நியாயந்தீர்க்கும். இந்த காலையில் பிரசங்கிக்கப்படுகிற இந்த வார்த்தை, இது தாமே அங்கே வால் தெருவில் (Wall street) பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது; அங்கே உள்ள கிறிஸ்தவ சபையில் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது; அங்கே கீழே உள்ள பிரஸ்பிடேரியன் சபையிலும் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. எங்கெல்லாம் தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது நியாயத்தீர்ப்பாக ஆகின்றது. தேவனுடைய வார்த்தையினால் ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். மேலும் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் என்னவெனில், ஒன்று நியாயத்தீர்ப்பு நம்மை முந்திக் கொள்ளும் அல்லது அது நம்மை பின் தொடரும். 42இப்பொழுது, இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் முடிவில் தான் (end) நியாயந்தீர்க்கப்பட வேண்டும் என்று இல்லை, அவன் நியாயந்தீர்க்கப்பட விரும்பினால் இந்த காலையிலேயே நியாயந்தீர்க்கப்படலாம். இப்பொழுது, நியாயத்தீர்ப்புக்கு ஒரு ஆயத்தமானது (Preparation) செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. தேவன், ஆதாமையும், ஏவாளையும் அவருடைய பிரசன்னத்தில் கொண்டு வருவதற்கு, அவர் ஒரு ஆயத்தத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. அதை செய்தது எது? கிருபை தான்ஆயத்தத்தை அளித்தது. ஓ, அதற்காக நான் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன். கிருபை ஆயத்தத்தை அளித்தது. கிருபை அன்பாயிருக்கிறது. தேவன் அவருடைய விழுந்துபோன சிருஷ்டிப்புகளை அவ்வளவாக நேசித்தார் எப்படியெனில் அவர்கள் அவருடைய பிரசன்னத்தில் வந்து நிற்கத்தக்கதாக நியாயத்தீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு ஆயத்தத்தை அவர் அளித்திருந்தார். தேவன் முன்னதாக சென்று செம்மறி ஆட்டையோ அல்லது மிருகங்களையோ கொன்றார். அவர்களை மூடும்படிக்கு அவர்கள் மீது தோல் ஆடையை (skins)உடுத்தினார்; நியாயத்தீர்ப்புக்கு முன்னமே இரத்தம் உருவாக்கப்பட்டது. ஆமாம், நியாயத்தீர்ப்பானது இரத்தத்தின் மூலமாக வருகிறது. எனவே அவர், குற்றம் புரிந்தவர்களின் குற்றத்தை மூடுவதற்கு, அப்பாவியானதின் (Innocent) இரத்தத்தை சிந்தினார். 43இப்பொழுது, இங்கே யாத்திராகமம் 19-ம் (எண்ணாகமம்-19 :-ஆசிரியர்) அதிகாரத்தில் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும், ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டு வரும்படிக்கு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக் கொடுங்கள்; அவன் அதை பாளயத்துக்கு வெளியே கொண்டு போகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். ஓ, நீங்கள் கவனிப்பீர்களானால், அது சிவப்பு கிடாரி. கவனியுங்கள், பெண் கிடாரியாக இருப்பதினால், அது சபைக்கு மாதிரியாய் இருக்கிறது. சிவப்பு, இப்பொழுது அந்த நிறத்தில் எந்த ஒரு பழுதும் காணப்படக் கூடாது; அது முழுவதும் சிவப்புநிறத்தில் இருக்க வேண்டும். சிவப்பு எப்பொழுதும் மீட்பையே குறிக்கிறது. சிவப்பு அது எப்பொழுதும் ஆபத்தைக் குறிக்கும் என்று நீங்கள் கூறலாம். சிவப்பு வெளிச்சம் (Red Light) அதைத்தான் நமக்கு தெரிவிக்கிறது, ஆனால் அது எப்பொழுதும் மீட்பாகவும் இருக்கிறது; அதைத் தாண்டி போக வேண்டாம். எனவே சிவப்பு எப்பொழுதுமே அடையாளமாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ராகாப் வேசி, வேவுக்காரர்களை சிவப்பு துணி அல்லதுசிவப்பு கயிற்றினால் இறக்கிவிட்டாள், அது ஒரு அடையாளமாயிருந்தது, அதினிமித்தம் தேவன் அவளுடைய வீட்டை இடிந்து விழாதபடிக்கு நிற்கும்படி செய்தார். 44இப்பொழுது, கவனியுங்கள், இங்கே இந்த சிவப்பு கிடாரியானது கொண்டு வரப்பட்டு எலெயாசார் பிரசன்னத்தில் கொல்லப்பட வேண்டும். அவன் தாமே அதை எடுத்து, குளம்புகளையும் மற்றும் எல்லாவற்றையும் சுட்டெரிக்க வேண்டும். மேலும் அது மரித்துக் கொண்டிருக்கையில், அவன் தன் விரலை எடுத்து, அதனுடைய இரத்தத்தில் தோய்த்து, ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கி தெளிப்பான், அவன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக தெளிப்பான், இப்படியாக ஏழு தரம் செய்வான், அது தாமே ஏழு யுகங்களில் அல்லது ஏழு சபை காலங்களில் சபை மீது இரத்தம் தெளிக்கப்படுவதையும், நியாயத்தீர்ப்பானது சிவப்பு கிடாரி மேல் வைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டுகிறது. இரத்தமானது ஏழுதரம் தெளிக்கப்பட்டது: இரத்த பலியானது, நியாயத்தீர்ப்பு செய்யப்பட்டவரின் ஸ்தானத்தில் நின்று, பாவ நிவாரணத்தை ஏழு தரம் செய்கிறது. பின்னர் சிவப்பு கிடாரியானது நெருப்பிலே போடப்பட்டு, சாம்பலாக்கப்பட வேண்டும். அதன் பிறகு இஸ்ரவேல்... ''வேறு பிரித்தலுக்கான ஜலம்“ என்று அதை அழைப்பார்கள், அதை அது செய்தது, அங்கே சிவப்புக் கயிறு, ஈசோப்பு நெருப்பில் போடப்பட்டு எரிக்கப்பட்டது. அதற்கு அர்த்தம், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்னும் கிருபையின் யுகங்கள், நெருப்பில் போட்டு எரிக்கபடும் கேதுரு கட்டை, சிவப்பு கயிறு, ஈசோப்பு மூலமாக தெரிவிக்கப்படுகிறது. நீங்கள் படிக்கும்போது, நீங்கள் தொடந்து படிப்பீர்களானால் இதை அறிந்துக் கொள்ளலாம். நேரத்தை கணக்கில் கொண்டு, அதைப் படிப்பதினிமித்தம் நேரத்தை அதிகமாக எடுக்கமாட்டேன் 45எனவே 19-ம் அதிகாரம், அது “வேறு பிரித்தலுக்கான ஜலம்” என்ற கட்டளையை காண்பிக்கிறது, எவனாகிலும் தீட்டானதையோ அல்லது வேறு காரியத்தை செய்திருப்பானாகில், இந்த சிவப்பு கிடாரியின் சாம்பல் அவன் மேல் வைக்கப்பட்ட பின் அவன் குற்றத்துக்கு நீங்கலாயிருப்பான். அவன் அசுத்தமாயிருப்பானாகில், பின்னர் இதுதாமே அவனுக்கு வேறு பிரித்தலுக்கான ஜலமாயிருக்கும். இந்த சிவப்பு கிடாரி, ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட சிவப்பு கிடாரி, ஒரு விசேஷித்த கிடாரி, அதின் இரத்தம் அவனுக்கும் சபைக்கும் இடையே நின்றது என்றும், அதினுடைய சாம்பல் அவனையும் அவனுடைய குற்றத்தையும் வேறுபிரித்து நீங்கலாக்கியது என்பதையும் அறிந்துக் கொள்ளும்படிக்கு அவர்கள் சந்ததி முழுவதும் அது ஞாபகார்த்தமாக (Memorial) இருந்தது. ஓ, என்னே, அதை நீங்கள் அறிந்துக்கொண்டு, கிறிஸ்து இயேசுவின் மேல் வைக்கும்போது... எப்படியாக நாம் குற்றம் செய்த போது, அந்த தீட்டுக் கழித்தலை நோக்கி பார்க்கிறோம்... அங்கே நியாயத்தீர்ப்பில் நின்றவர் அவரே, அவருடைய சரீரத்திலிருந்த இரத்தமானது தோய்க்கப்பட்டு, பூமியின் மீதும், அதற்கும் தேவனுடைய பரிசுத்த கூடாரத்துக்கு இடையேயும் தெளிக்கப்பட்டது, எனவே மாம்சம் என்னும் திரையை கிழித்து,உலக காரியங்களை புறம்பே தள்ளி அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக வருகிறவன் இரத்தமானது பாவபரிகாரமாக (atonement) கொடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்கிறான்: வேறு பிரித்தலுக்கான ஜலம். 46தேவன் அவருடைய இரக்கத்தின் மூலமாக, வார்த்தையாகிய ஜலத்தின் தீட்டுக் கழுவுதலினால் நம்மை கழுவி, வேறு பிரித்து, அவருக்காக பிரித்தெடுக்கப்பட்ட, அர்பணிக்கப்பட்டப் ஜீவியத்தை ஜீவிக்கும்படிக்கு, சபையை உலக காரியங்களிலிருந்து பிரித்தெடுத்தார். இன்றைக்கு உள்ள உலகத்தில் ஆக்கினைக்கு தீர்க்கப்படாமல் நடப்பது: ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆனால் வார்த்தை என்னும் ஜலத்தினால் பிரித்தெடுக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால்அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. தனிப்பட்ட நபர் மீது தீட்டுக்கழிக்கும் சாம்பலானது தெளிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஆக்கினையிலிருந்து அவன் விடுபட்டவனாக, இன்றைக்கு உள்ள உலகில் நடந்துக் கொண்டிருக்கிறான். என்னே அருமை... குற்றவாளியாகிய, அவன்தாமே, பிரதான ஆசாரியனாகிய எலெயாசார் சமூகத்திற்கும், அங்கே வெளியே எல்லாருடைய சமூகத்துக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிந்திருந்தான். அங்கே அவனுடைய தொண்டையானது வெட்டப்பட்டு; அவனுடைய சரீரமானது வெண்கல பலிபீடத்தின் மேல் எரிக்கப்பட வேண்டி இருந்தது. இவை யாவும் அவனுக்கு செய்யப்பட வேண்டியதாய் இருந்தது; அவன் தாமே (ஒலிநாடாவில் காலியிடம்) பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையே சிந்தப்பட்ட இரத்தத்தினால் அவன் விடுவிக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்த பாதையில் தேவனுடைய சிங்காசனத்துக்கு போக கிறிஸ்து இயேசுவிலுள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் உரிமை அளித்து அது கதவை திறந்து கொடுத்தது. ஒவ்வொரு சபை காலத்திற்கென்று, ஏழு முறை அதை நீதெளிக்க வேண்டும். மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், மற்றும் ஒவ்வொரு காலத்திலும் வேறு பிரித்தலுக்காக தெளிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த பாதை இருந்தது. 47இங்கே அவர் கூறுவது... நாம் இப்பொழுது அங்கே வரும்போது, நியாயத்தீர்ப்பு நிச்சயமாக வரும். இந்த காலையில் இன்னும் இதைச் சுற்றியுள்ள காரியங்களை அதிகமாக பார்க்க விரும்புகிறோம், ஆனால் இங்கே உள்ள யாத்திராகமத்திற்கு இப்பொழுது திருப்புவோம், சரியாக சொல்லப் போனால், எண்ணாகமம் 21-ம் அதிகாரம். இப்பொழுது, நாம் ஒரு சில நிமிடங்களில் முடிக்கும்படிக்கு, வெண்கல சர்ப்பத்தை குறித்து பேச, இப்பொழுது நம்முடைய பாடப் பொருளுக்கு வருவோம், ஏனெனில் நாம் துரிதப்படவேண்டும். இப்பொழுது, 20-ம் அதிகாரத்தில், அது 20-ம் அதிகாரம் 7-ம் வசனத்திலிருந்து என்று நான் விசுவாசிக்கிறேன். இதை கவனியுங்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: ஓ, நான் இன்னொரு நிமிடத்தை எடுத்துக் கொண்டு, இங்கு உள்ள வேறு சிலவற்றை படிக்க விரும்புகிறேன்: அப்படிச் செய்வது நன்றாயிருக்கும். 20-ம் அதிகாரம் 2-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். @@ஜனங்களுக்கு தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி (அல்லது அவனோடே தர்க்கம் பண்ணியிருப்பார்கள்)... எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருக்கும், என்றார்கள். நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன... ஆகவே இந்த கெட்ட இடத்தில் எங்களை கொண்டு வரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினது என்ன என்றார்கள். கவனியுங்கள், விதைப்பும்... இல்லாத இடம். எனவே, நீங்கள் ஒரு உண்மையான விசுவாசியாகும் போது மக்கள் உங்களோடு இணைந்து (associate) போகமாட்டார்கள். அது சரிதான். அது ஒரு விதமான, விநோதமான இடமாக இருக்க வேண்டும். சரிதான், “அத்திமரம் இல்லை,” ஐக்கியம் அவ்வளவாக இல்லை, யாருக்கும் உங்களோடே கூட எதையும் செய்ய விருப்பமில்லை.“அவன் தன் புத்தியை இழந்து, பைத்தியக்காரனாகிவிட்டான்.ஏன், நமக்கோ அங்கே உலகத்தில் அருமையான நேரம் இருந்தது”, என்று சொல்வார்கள். இப்பொழுது கவனியுங்கள். ...அத்திமரம் (இல்லாத இடம்)... திராட்சைசெடி... மாதுளை செடி; இங்கே குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை. 48ஓ, எப்பேற்பட்ட நேரம். கவனியுங்கள். “தண்ணீர் உள்ளது” என்றவுடன் அவர்கள் சந்தோஷமடைந்தனர். பார்த்தீர்களா? “இங்கே அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்று நீங்கள் கூறலாம், ”இங்கே, நாங்கள் செய்கிற ஒரே காரியம் - ஞாயிற்று கிழமைகளில் எங்களால் சினிமா மற்ற காட்சிகளுக்கு போகமுடியவில்லை. மேலும் எங்களால் பந்து விளையாட்டு போட்டிகளை பார்க்கமுடியவில்லை, நாங்கள் ஒரு நேரத்தில் இப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருந்தோம். இது மிகவும் ஒரு கொடிதான இடமாக இருக்கிறது“. இப்பொழுது கவனியுங்கள்,அது அவர்களுடைய அறிக்கையாக இருந்தது. அதற்கு மேல் போகாமல் நான் இதோடு நிற்பது நல்லது. இல்லையா? ஆஹா, ஆஹா, சரிதான். பையனே, அவர்கள் நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொண்டிருந்தார்கள். கவனியுங்கள். அது அவ்விதமாகத்தான் நடக்கும், பாருங்கள்‚ சில சமயங்களில் அந்த சோதனைகள் நம்மை சோதிக்கும்படிக்கு வருகிறது. தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு பிள்ளையும் தேவனால் சிட்சிக்கப்படுகிறான். நாம் சிட்சைக்கு நிற்கவில்லையென்றால், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிராமல், வேசியின் பிள்ளைகளாயிருக்கிறோம். சகோதரனே, கிறிஸ்தவத்தை குறித்து ஏதோ காரியம் இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனுஷன் மறுபடியும் பிறக்கும்போது, அவனை நிற்கச் செய்யக்கூடிய ஏதோ காரியத்தை அவனுக்குள்ளாக அது வைக்கிறது. இப்பொழுது, அவனுக்குள்ளாக ஒரு காரியத்தை செய்யக்கூடிய ஏதோ ஒரு காரியம் அங்கே அதற்குள்ளாக இருக்கிறது. நிச்சயமாக. இப்பொழுது, ஒரு அருமையான நேரத்தை பெற்றுக் கொள்வதற்காக நான் இங்கே கர்த்தரிடத்தில் வரவில்லை அல்லது அவன் கூறலாம். நான் அவரை நேசிப்பதினால் இங்கே வந்திருக்கிறேன். நான் அவருக்கு பாரத்தை (burden) சுமக்கும்படிக்கு, அவருக்கு உதவ வேண்டும். உலகில் எல்லோரும் வெறுமென கடந்து போக, இயேசு மட்டும் சிலுவையை சுமக்க வேண்டுமா? சுமப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சிலுவை உண்டு ...எனக்கும் ஒரு சிலுவை உண்டு. அது சரிதானே? அப்படியானால் கிறிஸ்தவன் எப்படி பாடவேண்டும்? அடுத்த வரி. இந்த அர்பணிக்கப்பட்ட சிலுவையை நான் சுமப்பேன், மரணம் என்னை பிரிக்கும் வரைக்கும் (அது சரிதான்) அதன் பின் ஒரு கிரீடத்தை அணிந்து கொள்வதற்காக வீட்டிற்கு கடந்து செல்வேன், ஏனெனில் எனக்காக ஒரு கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தங்க கிரீடமானது உங்கள் தலையில் சூட்டப்பட போவதில்லை, அதைக் காட்டிலும் மேலான ஒன்று சூட்டப்படப்போகிறது. ஒரு முறை, அதை காண நேரம் காணக்கூடிய தருணத்தை பவுல் பெற்றான். அவன், “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” என்றான். எந்த ஒரு கிரீடமோ, தங்க கிரீடமோ, அது எனக்கு பெரிதானதாக இல்லை. அப்படிப்பட்ட காரியங்களை குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. ஆனால் என்னுடைய கிரீடம், அது ஒரு புதிய சரீரம், ஒரு புதிய நபர், அவருடைய சாயலில் முடிசூட்டப்பட்டதும், அவரோடு கூட ஜீவிக்கக் கூடியதுமான மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரமாயிருக்கிறது. அந்த கிரீடம் எனக்கு போதுமானதாயிருக்கிறது. 49கொஞ்ச நாட்களுக்கு முன்னர், அங்கே தெற்கில் ஒரு வயதான கருப்பு நிற மனிதன், ஒரு காலை வேளையில் அவன் இரட்சிக்கப்பட்டபோது, அதை அவன் வெளியே சென்று தன் எல்லா நண்பர்களிடத்திலும் அதைக் குறித்து அறிவித்தான். “கிறிஸ்து என்னை விடுதலையாக்கினார்” என்று அறிவித்தான். வயதான, அந்த அடிமைகளுடைய (Slaves) முதலாளி அவனிடத்தில் வந்து, சாம்போ, என்ன இது? “கிறிஸ்து என்னை விடுதலையாக்கினார்” என்று நீ கூறுவதை நான் கேள்விப்பட்டேனே? அவன், “ஆமாம்,” என்றான். அவன், “என்னுடைய அலுவலகத்துக்கு சிறிது நேரம் கழித்து வா”. “சாம்போ, அது எந்த அளவுக்கு உண்மை என்று சொல்கிறாய்.” அவன், “எஜமானே, என் முழு இருதயத்தோடும் நான் அதை கூறுகிறேன், எப்படியெனில் கிறிஸ்து என்னை பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலையாக்கினார், என்றான்”. அதற்கு அவன், “சரி, கிறிஸ்து உன்னை விடுதலையாக்கினார் என்றால், நானும் இந்த காலையில் சென்று அந்த பேப்பர்களில் கையெழுத்திடுவேன், இந்த சுவிசேஷத்தை பிரங்கிக்க நீயும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டாய்”, என்றான். அவன் சுவிசேஷத்தை பிரசங்கிக்க புறப்பட்டான். கிறிஸ்துவுக்காக தன்னுடைய வெள்ளை சகோதரர்கள் அநேகரை சம்பாதித்த பல வருடங்களுக்கு பிறகு அந்த வயதான அடிமை, மரணப் படுக்கையில் இருந்தான். அவன் மரித்துவிட்டான் என்று நினைத்து, அவனுடைய வெள்ளை சகோதரர்கள் அநேகர் வெவ்வேறு இடங்களில் இருந்து அவனை பார்க்க வந்தார்கள். சிறிது நேரம் அப்படியாக படுத்திருந்த அவன், இந்த பக்கம் திரும்பி அவர்களை நோக்கினான். அதை அவன் இப்படியாக புரிந்துகொண்டு... இன்னும் நான் கடந்து போகவில்லையா, என்றபடி, இன்னும் நான் அங்கே இல்லையா? “ஓ,சாம்போ”, அங்கே சென்று... என்ன பார்த்தாய்? என்றார்கள். அவன், “ஓ, நான் அங்கே கதவண்டை நின்று கொண்டிருந்தேன்”, என்றான். ஒரு தூதன் என்னிடத்தில் வந்து, இப்பொழுது, சாம்போ, நீ மகத்தான பணியை செய்திருக்கிறாய். இங்கே வந்து உன்னுடைய கிரீடத்தையும், உன்னுடைய அங்கியையும், உன்னுடைய ஸ்தானத்தையும் பெற்றுக் கொள் என்றான். அதற்கு அவன், “ஓ, என்னிடத்தில் அங்கியையும், கிரீடத்தையும் குறித்து பேச வேண்டாம்”. நீ என்ன செய்ய விரும்புகிறாய், சாம்போ? என்றான். அவன், “இங்கே நின்று நான் அவரை பார்க்கட்டும்”, என்றான். மேலும் அவன், “அவரை பார்த்துக் கொண்டிருப்பது தான் எனக்கு என்றும் தேவைப்படுகிற கிரீடமாயிருக்கிறது. என்னை பாவத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை செய்த அவர்மேல் என் கண்களை பத்துலட்சம் ஆண்டுகள் வைத்து கொண்டே இருக்கட்டும்” என்றான். 50ஒவ்வொரு விசுவாசியின் உணர்வும் அவ்விதமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கிரீடத்தை அணிந்துக் கொள்ள வேண்டும் என்று நான் பரலோகத்துக்கு போக விரும்பவில்லை. ஒரு அங்கியையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் பரலோகத்துக்கு போக விரும்பவில்லை. நான் முற்றிலும் கைவிடப்பட்டு, அங்கே உலகத்தில் இருந்தபோது என்னை நேசித்து, விடுவித்து மேலும் என்னைக் கழுவி, புதுப்பித்து, அவருடைய பிரசன்னத்தில் என்னை புது சிருஷ்டியாக மாற்றின அவரைப் பார்க்க நான் பரலோகத்துக்கு போக விரும்புகிறேன். நான் சென்று காணவிரும்புவது அவரைத்தான். நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன். எந்த ஒன்றைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை, இந்த இடத்தில் மாதுளைச் செடி இருக்கிறதோ இல்லையோ, அருமையான நேரங்கள் இங்கே கிடைக்கிறதோ இல்லையோ, இங்கே பட்டினியோ, என்னதான் இங்கே இருந்தாலும், கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்க முடியாது. அது தாமே இந்த காலையில் மக்கள் செய்யும் காரியங்களை பொறுத்து நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, யாரோ ஒருவர் உங்கள் ஸ்தானத்தில் நின்றார்கள் எனவே அந்த ஒரு வழியில் மட்டுமே உங்களால் அதை பெற்றுக் கொள்ள முடியும். அவருடைய எல்லா பெரிதான நியாயத்தீர்ப்புகளையும் அவர்மேல் வைத்து, தேவன் இவ்வளவாக உலகத்தை அன்பு கூர்ந்தார். 51அங்கே வெளியே கன்மலை முன்பாக அவர் அவர்களை வரும்படி அழைத்தபோது அங்கே அந்த கன்மலையை கவனியுங்கள். அவர்கள் கன்மலையை அடித்தபோது, அங்கே பக்கவாட்டில் ஒரு பிளவு ஏற்பட்டது. இங்கே மோசேயின் கரத்திலிருந்த கோல் (stick) அது அவனுடைய கோல் அல்ல; அதுதாமே தேவனுடைய கோல். அதுதாமே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாயிருந்தது. அவன் அந்த கோலை வைத்து எப்படியாக இஸ்ரவேலை நியாயந்தீர்த்தான் என்று கவனியுங்கள். அவன் அங்கே வெளியே வந்து, மோசே அந்த கோலை நீட்ட, அப்பொழுது பேன்கள் வந்தது. மறுபடியும் அவன் கோலை நீட்டினான், கொப்புளங்கள் வந்தது. அந்த நியாயத்தீர்ப்பின் கோலை கொண்டு நியாயத்தீர்ப்பு எகிப்தின் மேல் கொட்டப்பட்டது. தேவனுடைய நியாயத்தீர்ப்பானது அந்த கோலில் இருந்தது. அந்த நியாயத்தீர்ப்பை கவனியுங்கள், தண்ணீர் பஞ்சமானது அந்த கன்மலையை அடித்தபோது, அந்த கன்மலையில் பிளவு ஏற்பட்டது, அந்த கன்மலை கிறிஸ்து இயேசுவே. நீங்கள் நிற்க வேண்டியதும், நீங்கள் பெற வேண்டியதுமான எல்லா நியாயத்தீர்ப்புகளும், இந்த காலை வேளையில் இங்கு உள்ள ஒவ்வொரு விசுவாசியும், நீங்கள் பெற வேண்டிய எல்லா நியாயத்தீர்ப்புகளும், எல்லா ஆக்கினைத் தீர்ப்புகளும், மேலும் எல்லா கீழ்படியாமையும், நீங்கள் செய்த எல்லா விரும்பத்தகாத காரியங்களும், தேவன் அவையெல்லாவற்றையும் அன்பினால் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மேல் கொட்டினார். கன்மலையானது அடிக்கப்பட்டது போல, அவரும் விலாவில் குத்தப்பட்டார். 52அந்த கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது. எனவே தாகத்தினால் மரித்துக் கொண்டிருந்த, அழிவில் இருந்த ஒரு ஜனக்கூட்ட மக்கள் பிழைத்தார்கள், காரணம் மோசேயின் நியாயத்தீர்ப்பின் கோலானது அல்லது மோசேயின் கரத்திலிருந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோல், கன்மலையின் பக்கவாட்டிலிருந்து, மரித்துக் கொண்டிருந்த ஜனத்துக்கு ஜீவனை கொண்டு வந்தது. இப்பொழுது, இந்த காலையில் என்ன ஒரு அருமையான நிறைவேறுதலாயிருக்கிறது: தேவன் உலகத்தை அன்பு கூர்ந்து தேவனற்றவர்களும், நேசிக்கப்படாதவர்களும், வேறு எங்கும் அவரில் விசுவாசமாயுள்ள எவரும் அழிந்து போகாதபடிக்கு தன்னுடைய ஒரே பேறான குமாரனை தந்தார். நான் ஒரு பாவியாக மரித்து இருக்கவேண்டும். நீங்களும் ஒரு பாவியாக மரித்து இருக்க வேண்டும். நாம் பரலோகத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது. நம்மை தகுதிப்படுத்திக் கொள்வதற்கு நாம் செய்யக்கூடிய காரியம் எதுவும் இல்லை. கவனியுங்கள் நாம் எப்படியாக அவரை நடத்தினோம் என்று.இந்த காலையில் நீங்கள் உங்களைக் குறித்து கொஞ்சம் கூட வெட்கப்படவில்லையா? நான் வெட்கப்படுகிறேன். நாம் அவரை நடத்தினவிதானம், இருப்பினும், தேவன் என்னுடைய எல்லா பாவத்தையும் எடுத்து, அவைகளை அவருடைய குமாரனின் மேல் வைத்தார். அங்கே நியாயத்தீர்ப்பானது; அவருடைய விலாவின் பக்கத்தை இரண்டாக பிளந்தது, தலையின் மேல் இருந்த கிரீடத்தை வெளியே தள்ளியது, மேலும் கண்ணீரும், எச்சிலும், எல்லாம் அவருடைய ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நீயும், நானும் நியாயத்தீர்ப்பில் நிற்காதபடிக்கு, அவர் கிரயத்தை செலுத்தினார். 53அந்த சிறிய பாடலை நான் நினைக்கிறேன், ஓ, என்ன விலையேறப் பெற்ற அன்பை பிதாவானவர், விழுந்து போன ஆதாமின் சந்ததிக்கு கொண்டிருந்தார். தன்னுடைய ஒரேபேரான குமாரனை பாடுகளுக்கு உட்படுத்தி, அவருடைய கிருபையினால் நம்மை மீட்டெடுத்தார். பார்த்துக் கொண்டிருந்தார், அவர் கல்வாரி மலைமேல் தொங்கிக் கொண்டிருப்பதை, கொடிய வேதனையில் பாடுபட்டு கொண்டிருப்பதை, ஏலி, ஏலி பிதாவே ஏன் என்னை கைவிட்டீர்? என்று சத்தமிடுவதை. ஜீவியத்தில் கைவிடப்பட்டவராகவும், மரணத்தில் கைவிடப்பட்டவராகவும், தேவனுடைய எல்லா கோபாக்கினையும் அவர் மேல் கொட்டப்பட்டு. நம்முடைய நியாயத்தீர்ப்பை அவர் ஏற்றுக் கொண்டார். தேவனாகிய அவர், நம்முடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, அப்பால் உள்ள தொலைதூர இடத்திற்கு சுமந்து சென்றார்; தேவனுடைய நியாயத்தீர்ப்பானது அவரை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தது, சாபத்தை அவர்மேல் போட்டது, அங்கே அவர் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டார். நம்மை நீதிமானாக்கும்படிக்கு திரும்பவும் ஈஸ்டர் காலையில் உயிர்த்தெழுந்து, உலகத்தில் காணாமல்போன ஒவ்வொரு பாவியையும் இரட்சிப்பதற்காக இப்பொழுது பரிசுத்த ஆவி என்னும் நபராக இருக்கிறார். நாம் ஜெபம் செய்வோமாக. 54பரலோகப் பிதாவே, அதை நான் நினைக்கையில், என்னுடைய இருதயம் பரவசமடைகிறது. தேவனே, உமக்கு சேவை செய்யும்படிக்கு, என்னுடைய சிந்தையும் தேவனுக்கு பிரியமில்லாத ஒவ்வொரு காரியங்களையும் விட்டு திரும்பட்டும். இங்கிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் இதே சிலாக்கியத்தை தந்தருளும்.இந்த காலையில் இங்குள்ளவர்கள் அசலான கிறிஸ்தவர்களாக இருந்தபோது உணர்ந்தது போல இப்பொழுது உணரவில்லை, அதனோடு கூட அவர்கள் ஒரு விதமாக விளையாடினார்கள், மேலும் ஓ, அதில் ஏதோ விசேஷித்த காரியம் இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு இருந்தது, ஆனால் இருப்பினும்,இன்னுமாக அவர்கள் தங்கள் ஜீவியத்தை உமக்கு ஒப்புக் கொடுக்காமல் இருக்கிறார்கள். கர்த்தாவே இப்பொழுதே, இந்த மணிவேளையில், அவர்கள் தங்களை வார்த்தையின் மூலம் உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்க செய்திடும். விசுவாசமானது கேட்பதினால் (hearing), தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் வருகிறதாயிருக்கிறது. இப்பொழுது அவர்களுடைய நியாயத்தீர்ப்பை கிறிஸ்து ஏற்றுக் கொண்டார் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், “தேவனே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்” என்று கூறி தங்கள் பாவங்களை இப்பொழுதே அறிக்கை செய்ய வேண்டும், அவர்கள் வெறுப்புணர்ச்சியை உடையவர்களாயிருந்தாலும், அல்லது சுய நலக்காரர்களாயிருந்தாலும், தவறான காரியங்களை செய்திருந்தாலும் நீர் அவர்கள் ஒவ்வொருவரையும் தாழ்மையோடும், இனிமையோடும் மன்னியும் பிதாவே. அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும், அவர்களை இம்மணி வேளையில் மன்னித்தருளும், இந்நாள் முதற்கொண்டு அவர்கள் தங்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும்நீர் என்ன கூறியிருக்கிறீரோ சரியாக அதின் மீதாக வைக்கட்டும், எப்படியெனில்; யோசுவா, காலேபை போல் நாங்களும் என்றாவது ஒருநாள் சாவாமை (immortality) என்னும் தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளட்டும். இதை உம்முடைய குமாரன் மூலமாக அளித்திடும். 55இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி இருக்கும்போது, இதுதாமே உனக்கும், எனக்கும், தேவனுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய இரகசிய தொடர்பாக இருக்கிறது. அருமை, ஒவ்வொரு தலையும் வணங்கியிருக்கையில், ஒவ்வொரு கண்ணும் மூடியிருக்கையில், யாராவது உங்கள் கரத்தை உயர்த்தி, 'பில்லி, என்னை நினைவுகூறும்“, என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ,தேவனே, இந்த காலையில் கீழே எங்களை நோக்கிப்பாரும். அந்த பரிதாபமான பிள்ளைகளின் கரங்களை நோக்கிப்பாரும். அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள்; நாங்கள் எல்லோரும் ஆதாமின் பிள்ளைகளாயிருக்கிறோம். வாழ்க்கை என்பது ஒரு சில மேலும் கீழுமான காரியங்களை (ups and Downs) கொண்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்... கர்த்தாவே, ஆனாலும் இப்பொழுது அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் இனிமேல் எந்த காரியத்தின் மீதும் சார்ந்திருக்க விரும்பவில்லை, ஆனால் உம்முடைய வார்த்தையின் மேல் சார்ந்திருக்கிறார்கள், ஏனெனில் “என் வார்த்தையை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு” என்று நீர் கூறியிருக்கிறீர். அவர்களை இப்பொழுது இரட்சியும், அநேக கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது, அவர்கள் எல்லாருடைய குற்றங்களையும் எடுத்துப் போடும். இந்நாள் முதற்கொண்டு, அவர்கள் தங்களை இப்பொழுது புதியவர்களாய் உமக்கு அர்பணித்துக் கொள்ளட்டும். எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். இருதயத்தின் இரகசியங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்; இப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு நபரும் உமக்கு கொடுத்த வாக்கை (vows) புதுப்பித்துக் கொள்ளும்படி நான் ஜெபிக்கிறேன். மேலும், பிதாவே, உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனும், உம்முடைய மக்களோடு நீர் என்னை பங்குகொள்ள செய்த ஆசீர்வாதங்களுக்கு தகுதியில்லாதவனுமான நான், உம்மிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் என்னுடைய ஜீவியத்தில் அநேக, அநேக தவறுகளை செய்திருக்கிறேன். பிதாவே, இப்பொழுது, உம்மிடத்தில் நான் கேட்டு கொள்வது, உம்முடைய சித்தத்துக்கு விரோதமாக நான் நினைத்த ஒவ்வொன்றையும் புறம்பே தள்ளி, இக்காலையில் மறுபடியும் புதிதாக ஊழியகளத்தில் போக துவங்கி, உம்மோடு கூட தனி ஒருவனாக நடக்கும்போது, தேவனே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னை வழி நடத்தவேண்டும் என்று உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். கர்த்தாவே; உமக்கும், உம்முடைய ஊழியத்திற்கும் என்னையே அர்பணிக்கிறேன், அதினிமித்தம் உம்முடைய ஊழியக்காரனின் ஜீவியத்திலிருந்து நீர் மகிமையை பெற்றுக் கொள்ளும்,கர்த்தாவே. எனக்கு இன்னும் எவ்வளவு காலம் விடப்பட்டிருந்தாலும், அது உம்முடைய மகிமைக்காக இருக்கட்டும். பிதாவே, என்னுடைய எல்லா தவறுகளையும் என்னுடைய எல்லா பாவங்களையும், என்னுடைய எல்லா பிழைகளையும் மன்னியும். இந்த காலையில் இந்த மக்களுடைய பாவங்களுக்காகவும், பிழைகளுக்காகவும் கூட நான் ஜெபிக்கிறேன். இன்றைக்கு தேவனுடைய வீட்டில் நாங்கள் உமக்கு வாக்கு கொடுத்திருக்கும் இந்த நாளை நாங்கள் நினைக்கட்டும். இயேசுவின் நேச நாமத்தில் இதை கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 56நான் பாட விரும்புகிற ஒரு சிறிய பாடல் என்னிடத்தில் இருக்கிறது, உங்களால் முடியுமானால் என்னோடு கூட சேர்ந்து நீங்கள் எல்லோரும் பாடுங்கள். அதை அநேகர் ஞாபகம் வைத்திருக்கலாம்: “நான் பாடுகளுக்கு ஊடாக தொடந்து போய்க் கொண்டிருக்கிறேன்”. அந்த பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, சரி, இசை வாசிக்கப்படவில்லை என்றாலும் நம்மால் முடியுமானால் நாமெல்லாரும் சேர்ந்து பாடுவோம். நான் பாடுகளுக்கு ஊடாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன், ஆம், நான் பாடுகளுக்கு ஊடாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் அதை பெறுவதற்கான கிரயத்தை செலுத்துவேன், மற்றவர்கள் என்ன செய்தாலும்; அற்பமாய் எண்ணப்பட்ட தேவனுடைய கொஞ்ச ஜனங்கள் போகும் வழியை எடுத்துக் கொள்வேன். நான் போகத் துவங்கியிருக்கிறேன்... ஊடாக, இயேசுவே, நான் பாடுகளுக்கு ஊடாக தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன். “தேவனே, இதோ என் கரத்தைப் பாரும் நான் நிச்சயமாகவே அதை கூறுகிறேன். உம்முடைய கிருபையினால் நான் அதன் ஊடாக செல்வேன்”? என்று எத்தனை பேர் உண்மையாகவே கூறுகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து அதை கூறுகிறீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, ஒவ்வொரு சிறு காரியத்தையும் புறம்பே தள்ளி, இன்றுமுதல், தேவனே, “நீர் எனக்கு ஒரு விசேஷித்த காரியத்தை கொடுக்க வேண்டும்... என்று கூற வேண்டாம், தேவனே, நான் செய்கிற ஒரே காரியம், உம்முடைய வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு நான் வருகிறேன். தேவனே, இதோ இங்கே நான் இருக்கிறேன். நான் உம்மோடு கூட தொடர்ந்து செல்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 57இப்பொழுது, நாம் அடுத்த காரியத்திற்கு போவதற்கு முன், நமக்கு இப்பொழுது... என்று நினைக்கிறேன். உங்கள் சரீரத்தில் வியாதிப்பட்டிருக்கிற எவரேனும் இங்கே ஜெபித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ஜெபித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உங்கள் கரங்கள் உயர்த்தப்படுவதை நான் பார்க்கட்டும். அது மிகவும் அருமை. அதை நாம் செய்வதற்கு முன், அதை நான் மறந்துவிட்டேன், நான் விசுவாசிக்கிறேன் இப்பொழுது அவர்கள்... ஞாயிறு பள்ளி அறிவிப்பு ஏதேனும் இருக்கிறதா, அதைப் பற்றிய அறிவிப்பை நீங்கள் செய்வீர்களா? சரிதான். அடுத்து செய்யப்பட வேண்டிய காரியம், அது ஞாயிறு பள்ளி காணிக்கை என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் மறந்துவிட்டேன். மூப்பர்கள் முன்னதாக வருவீர்களா? டெட்டி, பியானோ வாசிக்க வாருங்கள், உங்களால் முடிந்தால் வாருங்கள். இப்பொழுது மூப்பர்கள் ஞாயிறு பள்ளி காணிக்கைக்காக முன்னதாக வரட்டும். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் நேரத்தில் நாம் சுகமளிக்கும் ஆராதனைக்கு செல்வோம். இப்பொழுது நாம் சற்று நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. எங்கள் இரக்கமுள்ள, பரலோகப் பிதாவே, வார்த்தையில் நீர் எங்களுக்கு கற்பித்திருக்கிறீர், “தேவன் ஒருவனுக்கு கொடுத்த ஆசீர்வாதத்திலிருந்து ஒவ்வொருவனும் கொண்டு வரக்கடவன், எப்படியெனில் வாரத்தின் முதலாம் நாளில் நாம் ஒன்று கூடி வரும்போது நம்முடைய தசமபாகங்களையும், காணிக்கைகளையும் உம்முடைய வீட்டிற்கு நாங்கள் கொண்டுவரக்கடவோம்”. இப்படிப்பட்ட எளிய வழியில், இந்த விதானத்தில் உம்மை ஆராதிக்கப் பெற்ற சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், பிதாவே. இந்த காலையில் நாங்கள் நன்றியுள்ள இருதயங்களோடு உமக்கு கொடுக்க வந்திருக்கிறோம். தங்களுக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து கொடுக்கிற எல்லோரையும் ஆசீர்வதியும். கொடுப்பதற்காக இப்படிப்பட்ட இயற்கையான ஆசீர்வாதங்கள் இல்லாதவரையும் நீர் ஆசீர்வதியும். உம்முடைய பணிவிடைக்காரர்களாகிய இவர்களுக்கு அபரிவிதமான, அதிகப்படியான இயற்கையான ஆசீர்வாதங்களை கொடுக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். அதுதாமே சரியான காரியத்திற்காக செலவிடப்படும்படிக்கு, அதை சரியான வழியில் கண்காணிக்க எங்களுக்கு உதவி செய்யும். இதை உம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அது சரியே.